For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிரபாஸ் படத்துக்கு புதிய சிக்கல்..ஆதிபுருஷ் அனுமன் உடையில் குறை கண்டுபிடித்த ம.பி அமைச்சர்

  |

  புராண படங்களை எடுத்து இப்போதுள்ள ட்ரெண்டை பயன்படுத்தி பணம் பார்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அவர்களே எதிர்பாராத சிக்கல் வந்துள்ளது.

  பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் படம் ரெடியாகி வருகிறது. இதற்கான ட்ரெய்லர் அயோத்தியில் சரயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.

  படத்துக்கு வரவேற்பு இருக்கும் என்று யோசித்த படக்குழுவுக்கு வினையாக அதில் இடம்பெற்றுள்ள அனுமன் காட்சி குறித்து ம.பி அமைச்சர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

  இது ராமாயணமா? இல்லை இஸ்லாமியர்களின் கதையா? பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வெடித்தது போராட்டம்! இது ராமாயணமா? இல்லை இஸ்லாமியர்களின் கதையா? பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வெடித்தது போராட்டம்!

  தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மோதல்

  தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மோதல்

  பொன்னியின் செல்வன் படம் வெளியானவுடன் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது அதில் முக்கியமானது, சோழமன்னர்களை இந்துக்களாக சித்தரிக்கிறீர்கள் என வெற்றிமாறன் ஆரம்பிக்க அது பலத்த விவாதமாக திரைத்துறையினர் மத்தியிலேயே பரவி வருகிறது. மற்றொருபுறம் தமிழ் படம் தெலுங்கு படம் என்கிற வாதம். பிரபாசின் பாகுபலியா பொன்னியின் செல்வனா என தமிழ் தெலுங்கு ரசிகர்கள் இ டையே கடும் வாக்குவாதம் சமூக வலைதளத்தை சூடாக வைத்துள்ளது.

   பிரபாசின் அடுத்த படத்துக்கு சிக்கல்

  பிரபாசின் அடுத்த படத்துக்கு சிக்கல்

  இதற்கிடையே பிரபாஸ் நடித்த சமூக படங்கள் அவ்வளவாக போகவில்லை. பிரபாஸ் என்றால் ராஜா வேஷம் என்பது போன்று முடிவு செய்துவிட்டார்கள் போலும். பிரபாஸை வைத்து ஆதிபுருஷ் என்கிற ராமாயணத்தை மையப்படுத்தி பான் இந்தியா படமாக எடுக்க படக்குழு முடிவு செய்து படமாக்கி வருகின்றனர். இன்றைய இந்திய அரசியல் மக்களின் நிலைப்பாடு பிரபாசின் பிரபல்யம் அனைத்தையும் வைத்து ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் ஆதிபுருஷ்.

  ட்ரெண்டை பிடிக்கிறேன்னு சிக்கலில் சிக்கிய படக்குழு

  ட்ரெண்டை பிடிக்கிறேன்னு சிக்கலில் சிக்கிய படக்குழு

  இதற்காக படத்தின் டிரைய்லரை ராமர் பிறந்த பூமியாக மக்கள் மதிக்கும் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் வெளியிட்டார்கள். சினிமாக்காரர்களுக்கு ஒரு குணம் உண்டு எது ட்ரெண்டோ அதை கூச்சப்படாமல் சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பின்பற்றுவார்கள். அதற்கு உதாரணம் சமீப காலமாக வெளிவரும் வன்முறை, போதைக்கலாச்சரப்படங்களே. இவர்களும் அதுபோல் இன்றைய ட்ரெண்ட் பக்தி என்பதால் அதை மையப்படுத்தி படத்தை எடுத்து, அயோத்தியில் வெளியிட்டு விளம்பரம் தேடினார்கள். இதையெல்லாம் செய்தவர்கள் முக்கியமான சில விஷயங்களை விட்டுவிட்டார்கள்.

  புதிதாக சிக்கலில் சிக்கிய ஆதிபுருஷ்

  புதிதாக சிக்கலில் சிக்கிய ஆதிபுருஷ்

  காஸ்ட்யூம் தான் அது. ராமர் வேடம், லட்சுமணன் வேடம் அனுமன் வேடம் போன்ற வேடங்களுக்கு கண்டபடி காஸ்ட்யூம் போட முடியாதல்லவா? அதில் கோட்டை விட்டுவிட்டார்கள். படம் வட இந்தியாவில் ட்ரெய்லர் வெளியிட்டதால் அங்குள்ள அரசியல்வாதிகள் கண்ணில் பட இப்ப நிலைமை சிக்கலாகியுள்ளது. மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் டீசரை பார்த்து ட்வீட் செய்துள்ளார். அதில், "டீசரில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளன. ஹனுமான் தோல் ஆடைகளை அணிந்து காட்சியளிக்கிறார். இதுபோன்ற காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்துகின்றன. இதுபோன்ற காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பாளர் ஓம் ரவுத்துக்கு கடிதம் எழுதுகிறேன். அவரை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது பற்றி யோசிப்போம்" என பதிவிட்டுள்ளார்.

  English summary
  Those who think that they can make money by taking mythological films and using the current trend, they have an unexpected problem. Prabhas starrer Adipurush is getting ready. The teaser was released on the banks of Sarayu river in Ayodhya. In response to the film crew who thought that the film would be well received, the Minister of MP expressed his objection to the Hanuman costume in the film.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X