தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துக்கு புது ப்ரோமோ: குழம்பிய ரசிகர்கள், காத்திருக்கும் செம்ம ட்ரீட்!
சென்னை: தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தனுஷ் ரசிகர்கள் வெயிட்டிங்
தனுஷ் நடிப்பில் இறுதியாக 'கர்ணன்' திரைப்படம் 2020ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கியிருந்த இப்படம், தனுஷுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த, ஜகமே தந்திரம், மாறன், இந்தியில் அத்ரங்கி ரே, ஹாலிவுட்டில் 'தி கிரே மேன்' படங்கள், நேரடியாக ஓடிடியில் வெளியாகின. இதனால் ஏமாற்றத்துடன் இருந்த தனுஷ் ரசிகர்கள், இப்போது பெரிய கொண்டாட்டத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

தெறிக்கவிடுமா திருச்சிற்றம்பலம்?
'யாரடி நீ மோகினி' படத்திற்குப் பிறகு, தனுஷும் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரும் இணைந்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்.' தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில், செம்ம கமர்சியலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணைந்த தனுஷ் அனிருத்
ரசிகர்களால் ராக் ஸ்டார் என கொண்டாடப்படும் அனிருத்தை, சினிமாவில் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான். ஆனால், 'தங்க மகன்' படத்திற்குப் பின்னர், இந்த வெற்றிக் கூட்டணி ப்ரேக் அப் ஆனது. இந்நிலையில், மீண்டும் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷும் அனிருத்தும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இணைந்துள்ளனர். இத்தனை வருட பிரிவுக்கும் சேர்த்து, அனிருத் தனது இசையால் மேஜிக் செய்துள்ளார்.

இதுதான் செம்ம ட்விஸ்ட்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் "உங்கள் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது, விரைவில் டெலிவரி செய்யப்படும்" என ட்விட்டரில் போஸ்ட் போட்டிருந்தது. இதனால், ரசிகர்கள் ரொம்பவே குழப்பத்தில் இருந்தனர். கண்டிப்பாக இது 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அப்டேட்டாக இருக்கும் என்றாலும், அது என்ன என்றும் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

திருச்சிற்றம்பலம் ட்ரெய்லர் தான் அது
பின்னர் மீண்டும் பிரியா பவானி சங்கர் வீடியோவுடன் இன்னொரு ப்ரோமோ வெளியானது. அதில், 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ட்ரெய்லர், நாளை ( ஆக.7) மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குழப்பம் தெளிந்த தனுஷ் ரசிகர்கள், 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ட்ரெய்லருக்காக வெயிட்டிங்கில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











