நான் வேணும்னா இடுப்பை பிடிச்சுக்கட்டுமா? அதிரடி கிளப்பும் பீஸ்ட் படத்தோட புதிய ப்ரமோ!

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் 13ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பான வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ட்ரெண்டிங்கில் பாடல்கள்

ட்ரெண்டிங்கில் பாடல்கள்

படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற செய்துள்ளது. ரசிகர்களும் பாடல்கள், ட்ரெயிலரை சர்வதேச அளவில் அதிகமான வியூஸ்களை பெற செய்துள்ளனர். தொடர்ந்து இவை ட்ரெண்டிங்கிலேயே உள்ளன. கோடிக்கணக்கான வியூஸ்களை பெற்று தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியவையாகவே உள்ளன.

படத்தின் தீம் பாடல்

படத்தின் தீம் பாடல்

படத்தின் 2 பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், இரு தினங்களுக்கு முன்பு படத்தின் தீம் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் மாசான விஜய்யை பார்க்க முடிந்தது. முன்னதாக வெளியான இரண்டு பாடல்கள் உற்சாகமான விஜய்யை ரசிகர்களுக்கு காட்டியது.

ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்

ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்

படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ரசிகர்களின் மரண மாஸ் வெயிட்டிங்கிற்கு தொடர்ந்து தீனி போட்டு வருகிறது சன் பிக்சர்ஸ். ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தின் பிரமோஷன்களை அடுத்தடுத்து செய்து வருகிறது.

இன்று விஜய் பேட்டி

இன்று விஜய் பேட்டி

தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களையும் ட்ரெயிலரையும், தீம் பாடலையும் வெளியிட்டு ரசிகர்களை என்கேஜ் செய்த சன் பிக்சர்ஸ், இன்றைய தினம் விஜய்யின் பேட்டியை சன் டிவியில் ஒளிபரப்ப உள்ளது. இந்த பேட்டியை படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எடுத்துள்ளார்.

மற்ற மொழிகளிலும் சிறப்பான ப்ரமோஷன்

மற்ற மொழிகளிலும் சிறப்பான ப்ரமோஷன்

தொடர்ந்து 5 மொழிகளில் படம் ரிலீசாக உள்ள நிலையில், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிரமோஷன்களை சிறப்பான வகையில் முன்னெடுத்து செல்கிறது சன் பிக்சர்ஸ். அடுத்துடுத்து படம் குறித்த நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்டவர்களின் பேட்டிகளும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Recommended Video

என்னமா கார் ஓட்டறாரு..நம்ம Thalapathy Vijay | Beast | Rolls Royce | Tamil Filmibeat
புதிய ப்ரமோ

புதிய ப்ரமோ

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தை பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் புதிய ப்ரமோவை சன் நெட்வொர்க் சேனல்களில் சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்துள்ளது. இதில் பூஜா தனது கைகளை பிடித்துக் கொள்ள சொல்ல, தான் அவரது இடுப்பை பிடித்துக் கொள்ளட்டுமா என்று விஜய் கேட்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X