அப்டிபோடு...போஸ்டரிலேயே சாதனை கணக்கை துவக்கிய பீஸ்ட் ஃபஸ்ட்லுக்
சென்னை : விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் சாதனை பட்டியலே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடாத பிரபலங்களே இல்லை என கூறும் அளவிற்கு, சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பலரும் ஆடி, அந்த வீடியோவையும் வைரலாக்கி விட்டனர்.
Recommended Video
யூட்யூப்பில் அதிகமாக பார்த்தவர்கள் பட்டியலில் வாத்தி கம்மிங் பாடல் இடம்பிடித்துள்ளது. தியேட்டர்களில் 50 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்ட சமயத்திலேயே தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் படமானது மாஸ்டர்.
சமீபத்தில் கூட 2021 ல் ஆண்டில் அதிகமானவர்களை கவர்ந்த, பிரபலமான படம் என்ற பாராட்டையும் மாஸ்டர் தட்டிச் சென்றுள்ளது. தற்போது இந்த சாதனைக்கு போட்டியாக விஜய்யின் அடுத்த படமான பீஸ்ட் களமிறங்கி உள்ளது.

ஃபஸ்ட்லுக்கிலேயே சாதனை
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை. அதற்குள் ஃபஸ்ட்லுக்கிலேயே சாதனை கணக்கை இந்த படம் துவக்கி உள்ளது. சமீபத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவின் ஜார்ஜியாவில் முடிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்த பிறகே துவங்கப்பட உள்ளது.

மாஸாக வெளியான பீஸ்ட் ஃபஸ்ட்லுக்
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபஸ்ட்லுக் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இது வெளியான சில நிமிடங்களிலேயே விஜய் ரசிகர்கள் அவற்றை வைரலாக்கினர். செம மாஸாக வெளியிடப்பட்ட இந்த போஸ்டர்கள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தன.

இந்திய அளவில் சாதனை
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், விஜய்யின் பீஸ்ட் பட ஃபஸ்ட்லுக் தான், 24 மணி நேரத்தில் இந்தியாவிலேயே அதிகமானவர்கள் லைக் செய்த ஃபஸ்ட்லுக் போஸ்டர் என்ற சாதனையை பெற்றுள்ளது. 21 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 73,000 லைக்குகளை இந்த ஃபஸ்ட்லுக் போஸ்டர் பெற்றுள்ளது. மிக வேகமாக பகிரப்பட்ட போஸ்டரும் இது தானாம்.

மாஸ்டரை முறியடிக்கும் பீஸ்ட்
இதற்கு முன் மாஸ்டர் படத்தின் ஃபஸ்ட்லுக் தான் மிக குறுகிய காலத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்ததாக உள்ளது. இந்த சாதனையை விரைவில் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட்லுக் முறியடிக்கும் என நம்பப்படுகிறது. பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட்லுக் படைத்த சாதனையை வேறு ஏதாவது நடிகரின் படம் முந்துகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரா ஏஜெண்டாக விஜய்
தளபதி 65 என தற்காலிமாக பெயரிடப்பட்டிருந்த பீஸ்ட் படத்தில் விஜய் ரா அமைப்பின் ஏஜெண்ட்டாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ரொமான்ஸ், காமெடி கலந்த, ஏராளமான ஆக்ஷன் காட்சிகளை கொண்ட படமாக பீஸ்ட் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications