கொரோனா பரவல்.... சியான் 60 படக்குழுவிற்கு புதிய கட்டுப்பாடுகள்
சென்னை : சியான் நடிப்பில் சியான் 60 மற்றும் கோப்ரா படங்கள் தயாரிப்பில் உள்ளன.
இதில் சியான் 60 படத்தை முதலில் முடித்துக் கொடுக்க விக்ரம் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த வாரத்தில் சூட்டிங்
சியான் நடிப்பில் சியான் 60 மற்றும் கோப்ரா உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளன. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் சியான் 60 படத்தின் சூட்டிங்கை முதலில் முடித்துக் கொடுக்க விக்ரம் முடிவு செய்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளது.

ஒரேகட்டத்தில் சூட்டிங்
படத்தில் அவரது மகன் துருவ், சிம்ரன், வாணி போஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதன் 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. இதில் கிராபிக்ஸ் காட்சிகள் குறைவு என்பதால் மீதமுள்ள படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க தயாரிப்புத் தரப்பு முடிவெடுத்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்
இதையடுத்து கோப்ரா படத்தில் கவனம் செலுத்த விக்ரம் முடிவெடுத்துள்ளார். இரண்டு படங்களையும் லலித் குமார் தயாரித்து வருவதால் இந்த படங்களை ஒன்றன்பின் ஒன்றாக நடிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சியான் 60 தயாரிப்பு தரப்பு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தடுப்பூசி கட்டாயம்
படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைத்து தரப்பினர் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் அனைவரும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும் என்பதே அது. ஒரு தவணையாவது தடுப்பூசி போடாத பட்சத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











