»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை ரோஜா வாங்கிய கடனுக்கு தனது வீடு ஒன்றை பினணயாகதருவதாக இயககுனர் செல்லவணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த முகன்சந்த் சோப்ரா என்பவரிடம் ரோஜாவின்சகோதரர் கடன் வாங்கியிருந்தார். அதற்கு நடிகை ரோஜா ஜாமீன்கொடுதிருந்தார். வாங்கிய கடனை ரோஜாவின் சகோதரர் திருப்பித்தராததால் அவருக்கு ஜாமீன் கொடுத் ரோஜாதான் பணத்தைத் தரவேண்டும். வட்டியுடன் சேர்த்து 42 லட்ச ரூபாய் தரவேண்டும் எனசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் ரோஜா பணத்தைத் திரும்ப செலுத்தும் வரை, ரோஜாவை வைத்துதிரைப்படம் எடுக்கும் திரைப்பட உரிமையாளர்கள் அவரது சம்பளபாக்கியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என போத்ரா மனுதாக்கல்செய்ததை ஏற்று தயாரிப்பாளர்களை ரோஜாவிந் சம்பளத்தைநீதிமன்றதிதல் கட்டுமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் ரோஜாவின் காதலரும், அவரை தமிழ்த் திரையுலகிற்குஅறிமுகம் செய்தவருமான இயக்குனர் செல்வமணி ரோஜா கட்டவேண்டிய பணத்திற்காக தனக்குச் சொந்தமான சென்னை சாலிக்கிராமம்அருகிலுள்ள 3.600 சதுர அடி உள்ள அசையா சொத்தை பிணையாககொடுக்க முன் வந்துள்ளார்.

அதை தான் குடோனாக பயன்படுத்தி வந்ததாகவும் அதன் மதிப்பு 30 லட்சரூபாய் எனவும், ரோஜாவின் கடன் அடைக்கப்படும் வரை அந்த இடத்தைவிற்க மாட்டேன் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

ரோஜாவும் இந்த மனுவை ஏற்குமாறு மனு தாக்கல் செய்துள்ளார். இதன்மீதான விசாரணையை நீதிபதி ராமமூர்த்தி வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்து சனிக்கிழமையன்று உத்தரவிட்டார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil