சூர்ப்பனகையில் மிரட்டும் ரெஜினா... த்ரில்லர் படத்தின் புதிய ஸ்டில் வெளியீடு
சென்னை : இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ரெஜினா கசான்ட்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் சூர்ப்பனகை.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திகில் மற்றும் திரில்லர் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் புதிய ஸ்டில் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரெஜினா மிரட்டியுள்ளார்.

ரெஜினா மிரட்டல் நடிப்பு
இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ராஜ் சேகர் வர்மா தயாரித்து வரும் படம் சூர்ப்பனகை. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. ரெஜினா கசான்ட்ரா முன்னணி கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நேனேநா என்ற பெயரில் இந்த படம் உருவாகி வருகிறது.

வித்தியாசமான கெட்டப்
திகில் மற்றும் திரில்லர் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சதீஷ் மற்றும் அக்ஷரா கவுடா ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரெஜினா வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

வெளியிட்ட விஜய் சேதுபதி
கடந்த ஆண்டில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அப்போது அந்த போஸ்டர் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் புதிய ஸ்டில் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரெஜினா மிரட்டியுள்ளார்.

வெற்றிப்படம் கொடுக்க திண்டாட்டம்
கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை சிறப்பான நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டவர் ரெஜினா. தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











