என்னங்க தினமும் எதனா செஞ்சிக்கிட்டு இருக்காங்க... புது ஸ்டில்ஸ் வெளியிட்ட டீம்

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில் பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னதாக படத்தின் நெஞ்சை அள்ளும் மெலடி பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்திற்கு பிரமோஷனே தேவைப்படாத வகையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படம் வெளியாகவுள்ளது.

சிறப்பான ராக்கி படம்

சிறப்பான ராக்கி படம்

முன்னதாக கடந்த மாதத்தில் ரவுடி பிக்சர்ஸ் வெளியிட்ட ராக்கி படம் சிறப்பாக வரவேற்பை பெற்றுள்ளது. வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. வசந்த் ரவி, பாரதிராஜாவின் நடிப்பு படத்தில் சிறப்பாக பேசப்பட்டது.

வரவேற்பை பெற்ற பாடல்கள்

வரவேற்பை பெற்ற பாடல்கள்

இந்நிலையில் ரவுடி பிக்சர்ஸ் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை வெளியிட உள்ளது. இந்தப் படத்தின் 3 பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையில் டூ டூ பாடல் கோடிக்கணக்கில் பார்வைகளை பெற்றுள்ளது.

2வது முறையாக இணையும் கூட்டணி

2வது முறையாக இணையும் கூட்டணி

படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இதுவும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

புதிய பாடல் வெளியீடு

புதிய பாடல் வெளியீடு

இரு தினங்களுக்கு முன்பு படத்தின் நான் பிழை... நீ மழலை பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இடையிலான அழகான காதல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமந்தாவின் கேரக்டர் படத்தில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

Recommended Video

Kathu vaakula rendu kaadhal: விஜய் சேதுபதியை வேற லெவலில் வரவேற்கும் விக்னேஷ் சிவன் - வீடியோ
புதிய ஸ்டில்ஸ் வெளியீடு

புதிய ஸ்டில்ஸ் வெளியீடு

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் படத்தில் மிகவும் அழகாக காணப்படுகின்றனர். இந்நிலையில் படத்தின் புதிய ஸ்டில்ஸ்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மிகவும் கலர்புல்லாக இந்த ஸ்டில்ஸ் உள்ளது. இதன்மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X