கோலிவுட் சினிமாவுக்கு புது சூப்பர் ஹீரோ கிடைச்சாச்சு.. தியேட்டர்களில் FDFS கொண்டாட்டம்!

Recommended Video

நல்லா தூங்குனேன் | HERO MOVIE PUBLIC OPINION | FILMIBEAT TAMIL

சென்னை: சிவகார்த்திகேயன் ஹீரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் ஹீரோ படக்குழுவினர் படத்தை பார்த்தனர்.

பொதுவாக சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே காலை காட்சிகளில் FDFS கொண்டாட்டம் வேற லெவலில் இருக்கும்.

சூப்பர் ஹீரோ படமாக அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள ஹீரோ படம் என்பதால், இன்னும் சிறப்பாக தியேட்டர்களில் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஹீரோவுக்கு உற்சாக வரவேற்பு

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஹீரோ படத்திற்கு ரசிகர்களிடையே உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு மாலை போட்டு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

என்ன ஒரு ஸ்மைல்

ஹீரோ படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் சென்று பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், உற்சாகமாக கையசைத்து படம் நிச்சயம் வெற்றி பெறும் என்கிற பயங்கர நம்பிக்கையில் ஸ்மைல் செய்ததை இந்த ரசிகர் வீடியோ க்ளிப்பாக எடுத்து என்ன ஒரு ஸ்மைல் என ட்வீட் போட்டுள்ளார்.

ஹீரோ டீம் செலிபிரேஷன்

ரோகிணி திரையரங்கம் சார்பாக ஹீரோ படக்குழுவினருக்கு மாலை அணிவிக்கப்பட்டு, உற்சாகமாக FDFS கொண்டாட்டம் அமர்களமாக கொண்டாடப்பட்டது.

தல ரசிகர்கள் வாழ்த்து

சிவகார்த்திகேயன் தல அஜித்தின் தீவிரமான ரசிகர் என்பது ஊருக்கே தெரியும். ஹீரோ படம் இன்று வெளியாகிவுள்ள நிலையில், தல அஜித் ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வெற்றிபெற வாழ்த்தி வருகின்றனர்.

இது திருப்பூரில்

சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஹீரோ படத்தின் காலைக் காட்சியை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். திருப்பூர் ரசிகர்கள் மேள தாளத்துடன் ஹீரோ FDFS கொண்டாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி ரசிகர்களும் வாழ்த்து

சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ஹீரோவாக வருவார் என விஜய் அவார்ட்ஸ் மேடையிலே நடிகர் விஜய் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் ஹீரோ படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், தளபதி விஜய் ரசிகர்களும் ஹீரோ வெற்றி பெற வாழ்த்தி வருகின்றனர்.

கோலிவுட் சூப்பர் ஹீரோ

ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களும், பாலிவுட்டில் சில சூப்பர் ஹீரோக்களும் இருக்கின்றனர். ஆனால், கோலிவுட்டில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் பக்கா சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டுகிறார் என்றும், ஹீரோ படத்தின் இன்ட்ரோ சீன் தெறிக்கவிடுவதாகவும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இது படம் அல்ல பாடம்

ஹீரோ படம் வெறுமனே சூப்பர் ஹீரோ படம் அல்ல, கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகளை தோலுரித்தும் காட்டியுள்ளது. இது படம் அல்ல பாடம் என்றும், இப்படியொரு கதையை எழுதி இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X