வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் - இரண்டாம் உலகம் உள்பட 3 படங்கள் ரிலீஸ்!

By Shankar

சென்னை: இந்த வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக வெளியாகிறது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாம் உலகம்.

ஆர்யா - அனுஷ்கா நடித்துள்ள இந்தப் படம், கடந்த இரு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது.

பிவிபி சினிமா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

சமாளிப்பு

சமாளிப்பு

செல்வராகவனுக்கு எதிராக மூன்று முன்னணி தயாரிப்பாளர்கள் பிரச்சினையைக் கிளப்பிய நிலையில், அவர்களைச் சமாளித்து இந்தப் படத்தை இன்று வெளிக் கொணர்ந்துள்ளனர்.

படம் வெளியான பிறகு அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் என்று கூறி சமாதானம் செய்துள்ளனர்.

தெலுங்கில் வர்ணம் என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகிறது. மொத்தம் 1200 திரையரங்குகள் இந்தப் படத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மெய்யழகி

மெய்யழகி

இன்று வெளியாகும் இன்னொரு படம் மெய்யழகி. ஆர்டி ஜெயவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பாலாஜி, ஜெய்குவேஹினி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ரிஸ்வான் தயாரித்துள்ளார். அக்கா - தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கிராமத்துக் கதை இது.

மாயை

மாயை

புதுமுகங்களை வைத்து ஜே ஆர் கண்ணன் இயக்கியுள்ள படம் மாயா. இந்தப் படமும் இன்று வெளியாகிறது. இந்தப் படத்துக்கும் கணிசமாக சென்னை நகரில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

லாஸ் வேகாஸ்

லாஸ் வேகாஸ்

இன்று வெளியாகும் ஒரே ஹாலிவுட் படம் லாஸ் வேகாஸ். திரா என்ற மலையாளப் படமும், கோரி தேரா பியார் மெய்ன் மற்றும் சிங் சாப் தி கிரேட் ஆகிய இரு இந்திப் படங்களும் வெளியாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X