»   »  கே பாலச்சந்தர் பெயரில் திரையரங்கம்.. இயக்குநர் சங்கத்தில் திறப்பு

கே பாலச்சந்தர் பெயரில் திரையரங்கம்.. இயக்குநர் சங்கத்தில் திறப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் கே பாலச்சந்தர் பெயரில் திரையரங்கம் இன்று திறக்கப்பட்டது.

உதவி இயக்குநர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட் செய்வதற்கும் இயக்குநர்கள் சங்க கட்டிடத்தில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

New theater in the name of K Balachander

இந்த திரையரங்கிற்கு இயக்குநர் பாலச்சந்தரின் நினைவாக 'இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அரங்கம்' என்று பெயர் சூட்டப் பட்டு. இயக்குனர் பாரதிராஜாவால் இன்று திறக்கப்பட்டது.

நாற்பது உதவி இயக்குநர்கள் குறும்படங்களை இயக்கி உள்ளார்கள். அதில் இரண்டு குறும்படங்கள் இன்று திரையிடப்பட்டன. இரண்டு படங்களும் சிறந்த படங்கள் என்று அவற்றின் இயக்குநர்களை பாரதிராஜா பாராட்டினார்.

New theater in the name of K Balachander

'பாலசந்தர் தமிழ் திரையுலகில் பல வெற்றிகளைக் கண்டவர். பல சாதனைகளைப் பதிவு செய்தவர். அவரைப் போலவே இளம் இயக்குநர்களும், நாளைய இயக்குநர்களும் தங்களது சாதனைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை' என்றார் பாரதிராஜா.

விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பி .வாசு,கே. பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு குறும்படங்களை இயக்கிய உதவி இயக்குநர்களை பாராட்டிப் பேசினார்கள்.

New theater in the name of K Balachander

சங்கத்தின் தமிழ் வெள்ளித் திரை என்ற இணையதளத்தை கே.பாக்யராஜ் துவைக்கி வைத்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைபுலி. எஸ்.தாணு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலச்சந்தர், பாரதிராஜா இருவரை பற்றிய குறும்படங்களை துவைக்கி வைத்தார்.

சங்கத்தின் தலைவர் விக்ரமன் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார்.

English summary
A new mini theater has been inaugurated in the name of late legend K Balachander today at Directors Association.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil