“பெரியவர் செத்தா யாருக்கு பெரிய லாபம்!" .. சிசிவி கதை சொல்லும் புதிய டிரெய்லர்!

செக்க சிவந்த வானம் படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Recommended Video

ட்ரெண்டாகும் ஃபிரீக் Freak பெண்ணே, செக்க சிவந்த வானம் #FreakPenne #CCV2

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள செக்கச் சிவந்த வானம்' படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது.

காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள படம் செக்கச் சிவந்த வானம். அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், ஜெயசுதா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

வரும் வியாழனன்று இப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இந்தப் படத்தின் முதல் டிரெய்லர் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் டிரெய்லரிலேயே படம் அதிரடி ஆக்சன் படம் என்பது உறுதியானது. இதனால், இந்தப் படத்தை மணிரத்னம் ரசிகர்கள், அரவிந்த் சாமி ரசிகர்கள், விஜய் சேதுபதி ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் என ஒரு பெரிய கூட்டமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

பெரியவர் செத்தா...

பெரியவர் செத்தா...

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு பேசுவது போன்ற காட்சிகளுடன் இந்த டிரெய்லர் ஆரம்பமாகிறது. அதில், ‘பெரியவர் செத்தா யாருக்கு பெரிய லாபம்?" என சிம்பு கேட்கிறார்.

பெரியவர் இடம்

பெரியவர் இடம்

டிரெய்லர் முழுவதுமே பெரியவர் இடத்தைப் பிடிக்க அவரது மூன்று மகன்களான அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு மற்றும் அரவிந்த்சாமியின் நண்பரும், போலீசுமான விஜய் சேதுபதி ஆகியோர் செய்யும் முயற்சிகள் தான் உள்ளது. படத்தில் பெரியவராக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த இடம் யாருக்கு

அடுத்த இடம் யாருக்கு

அவருக்குப் பிறகு அந்த இடத்துக்கு யார் வருவது என்ற போட்டி தான் படத்தின் ஸ்டோரிலைன் என்பது டிரெய்லரைப் பார்க்கும்போது புரிகிறது. இந்த டிரெய்லர் முழுவதும், ‘செவந்து போச்சு நெஞ்சே' பாடல் பின்னணியில் துப்பாக்கிக் குண்டுகள் வெடித்துச் சிதறும் காட்சிகளுடன் பரபரப்பாக உள்ளது. டிரெய்லரைப் பார்க்கும் போதே படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது.

தடையில்லா சான்று வழங்க மறுப்பு

ஆனால், இப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது. எனவே, குறிப்பிட்டபடி இப்படம் வரும் வியாழனன்று ரிலீசாகுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Read more about: chekka chivantha vaanam ccv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X