For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  5 கால் பின்னல் போட்டு நயன்தாரா நடந்து வந்தா.. அடடா அடடா.. அள்ளுமே!

  |

  சென்னை : பெண் எப்போதும் அழகானவள், பெண் பெண்மைக்கே அழகு சேர்ப்பவள், பால் போன்றவள், தேன் போன்றவள் என்றுதான் நிறைய அள்ளி விட்டிருக்கிறார்கள் நம்ம கவிஞர்கள்.

  ஆனால் அதை விட, பெண் எதார்த்தமானவள், அவளின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விஷயங்கள் நிறைய இருக்குங்க. அதைப் பார்த்தவர்கள் குறைவு.. அதில் ஒரு அம்சம்தான் அழகான கூந்தல். அந்த கூந்தலில் எத்தனை ஸ்டைல் எந்தனை வகை இருந்தாலும், இதை டிரெண்டாக்குவது நாயகிகள்தான்.

  நமக்கு தெரிஞ்சது என்னனா ஒத்த ஜடை.. அதுவும் இல்லனா ரெட்டை ஜடை ... இன்னும் ஸ்டைலா இருக்கணும்னா குதிரை வாலு இது தவிர வேறு ஸ்டைல் இல்லனுதான் நினைச்சோம். இப்போ இருக்குற ஹேர் ஸ்டைலை கேட்டா, இழுத்து பிடித்து பின்னல் போட முடிதான் இல்லையோ என்று தோன்றுகிறது. அப்படி டிரெண்டாகி வரும் சில ஹேர் ஸ்டைல் பற்றியும், அதை பிரபலமாக்கிய நாயகிகள் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

  ராமராக நடிக்க அந்த நடிகர் அப்படி பொருந்துவார்.. இயக்குநர் ராஜமெளலி மிஸ் பண்ணிட்டாரோ?ராமராக நடிக்க அந்த நடிகர் அப்படி பொருந்துவார்.. இயக்குநர் ராஜமெளலி மிஸ் பண்ணிட்டாரோ?

   ராஜா ராணி ஸ்டைல்

  ராஜா ராணி ஸ்டைல்

  இந்த 5 கால் பின்னல் அறிமுகமானதே ராஜா ராணி படத்தில் இருந்துதான். அந்த படம் முழுக்க நயன்தாரா லூஸ் ஹேரில் தான் வருவாங்க. ஜெய்யை கல்யாணம் பண்ண அழகா சேலை கட்டி, சிம்பிளா கூந்தலை வாரி எடுத்து பின்னல் போட்டு அதுல கொஞ்சமா மல்லிபூ வைத்து கலக்கலா வந்து நிப்பாங்க சும்மா தியேட்டரே அள்ளும் கைத்தட்டலில். ஒரே ஒருகாட்சியில வந்தாலும் சும்மா நச்சுனு மனசுல பதிற மாதிரி இருந்தது அந்த 5 கால் பின்னல். அப்போதையில் இருந்து காலேஜ் இளசுகளில் பேவரைட் ஹேர்ஸ்டைல் இது தான்.

   லூஸ் ஹேர்

  லூஸ் ஹேர்

  நம் ரவுடிபேபி சாய் பல்லவியோட தனி சிறப்பே அந்த தலைவிரி கோலம் தான். கொஞ்சம் அடர்த்தியா , லைட்டா சுருட்டை முடியுடன், அழகான லூஸ் ஹேரில் பச்சென்று மிளிரும் அழகு தேவதை. தெலுங்கு, தமிழ், மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் ,சினிமா நிகழ்ச்சிகள் , விருது வழங்கும் விழா என எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் இதே ஸ்டைலையே பின்பற்றுகிறார். அனைவருக்கும் தெரிந்த ஹேர் ஸ்டைல் என்றாலும் இப்போது பிரபலமாகி வரும் இந்த ஸ்டைலுக்கு பெயர் சாய் பல்லவி ஸ்டைலாம்.

   சைடு ட்விஸ்ட்

  சைடு ட்விஸ்ட்

  விஜய்யுடன் நடித்த தெறி படத்தில் ஒரு வித்தியாசமான ஹேர் ஸ்டைலை பின்பற்றி இருப்பார் சமந்தா. தலையில் லைட்டா பஃப் வைச்சி சைடு வகிடு எடுத்து வாரி சேலையில் வந்து அட்டகாசப்படுத்தி இருப்பார். அந்த சிகை அலங்காரத்திற்கு பெயர் சைடு ட்விஸ்ட் ஸ்டைல். இப்போ வர்ற எல்லா படத்துலையும் இந்த ஹேர் ஸ்டைல் தான் டிரெண்டிங். இந்த ஹேர் ஸ்டைல் கல்லுரி பெண்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது.

  Prabhas உடன் நடிக்க Deepika கேட்ட சம்பளம்
   பாப் கட்டிங் ஸ்டைல்

  பாப் கட்டிங் ஸ்டைல்

  படத்திற்கு படம் சிகை அலங்காரத்தில் வித்தியாசம் காட்டி வரும் சமந்தா ஓ பேபி திரைப்படத்தில் பாப் கட்டிங்கில் மிரட்டி இருப்பார். மேலும் நீதான் என் பொன் வசந்தம் படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக வந்து நெற்றியில் முடிவிழ க்யூட்டாக நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். இருப்பினும் பாப் கட்டிங் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே பிடித்தமான ஒன்றாக உள்ளது. ஒரு சிலர் அந்த ஸ்டைலை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். ஏன் என்றால் அலட்டலாக அலங்காரம் செய்து கொள்ள முடியாது என்பதால். கலத்துக்கு காலாம் மாரும் டிரெண்டிக்கான ஸ்டைலை பின்பற்றி ஸ்டைலோ பளிச்சினு அழகா ஸ்டைலா இருக்க யாருக்கத்தான் பிடிக்காது.

  English summary
  Some of the New Trending hairstyles of modern Tamil heroines.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X