twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாக்டவுனால் வலிமை படத்துக்கு இப்படியொரு பிரச்சனையாம்.. அந்த காட்சிகளை எப்படி எடுக்க போறாங்களோ?

    |

    சென்னை: இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த வலிமை படத்திற்கு தற்போது நடைபெற்று வரும் லாக்டவுனால் புதிய பிரச்சனை ஒன்று கிளம்பி இருக்கிறது.

    கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

    பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    யுவன் இசை

    யுவன் இசை

    தீனா, பில்லா, மங்காத்தா, நேர்கொண்ட பார்வை என யுவன் சங்கர் ராஜா, அஜித் காம்போ என்றாலே ரசிகர்களுக்கு குதூகலம் தான். இந்த அசத்தலான காம்போ, நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தற்போது வலிமை படத்திலும் இணைந்து இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் மாஸ் பாடல்கள் இல்லாத நிலையில், அந்த கவலை வலிமை படத்தில் தீரும் என்றே தெரிகிறது.

    சீக்ரெட்டா செய்யும் இயக்குநர்

    சீக்ரெட்டா செய்யும் இயக்குநர்

    சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என மூன்று மெகா ஹிட் படங்களை இயக்கியுள்ள எச். வினோத், தல அஜித்தின் வலிமை படத்தை இயக்கி வருகிறார். பெரிய அறிவிப்புகள், விளம்பரங்கள் ஏதும் செய்யாமல், படம் ரிலீசாகி அதை பார்த்து மக்கள் பேசட்டும் என நினைக்கும் வெகு சில இயக்குநர்களில் இவரும் ஒருவர்.

    மையக் கதை

    மையக் கதை

    வலிமை படத்தின் மையக் கருவே பைக் ரேஸ் தான் என்பது கசிந்து வருகிறது. ஆர்.எக்ஸ் 100 படத்தின் ஹீரோ கார்த்திகேய கும்மகொண்டா இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார். மேலும், பைக் ஸ்டன்ட் செய்யும் இளைஞராகவும் அவர் நடித்து அசத்தவுள்ளார். சமீபத்தில் தனது சிக்ஸ் பேக்கை வெளியிட்டு வைரலாக்கினார்.

    வாய்ப்பில்லை

    வாய்ப்பில்லை

    வலிமை கதை பைக் ரேஸை மையமாக வைத்து உருவாகி வரும் நிலையில், ஸ்பெயின், மாஸ்கோ உள்ளிட்ட நாடுகளில் பைக் ரேஸ் காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருந்தார் இயக்குநர் எச். வினோத். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், வெளிநாட்டு ஷூட்டிங் நடக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.

    ரொம்ப கஷ்டம்

    ரொம்ப கஷ்டம்

    ஏற்கனவே செங்குன்றம் அருகே இருக்கும் அவுட்டர் ரிங் ரோடில் வலிமை படத்தின் பைக் ரேஸ் காட்சிகள் ஷூட் செய்யப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகின. தற்போது வெளிநாட்டு ஷூட்டிங்கை இந்தியாவிலேயே எப்படி ஷூட் செய்து எடுக்கப் போறோம் என்ற யோசனையில், பல மாற்றங்களையும் திட்டத்தையும் தீட்டி வருகிறார் எச். வினோத்.

    English summary
    Coronavirus locdown create another problem in Ajith’s Valimai shooting. Some bike race stunts which are plan to shoot in foreign countries will plan to shoot in India alone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X