துள்ளிக் குதித்து ஓடி வரும் 'மொசக்குட்டி'- நல்லா ஓடுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் படங்களுக்கு அழகாக பெயர் வைத்ததெல்லாம் போய் தற்போது ட்ரெண்டியாகவோ இல்லை படு லோக்கலாகவோ பெயர் வைப்பதுதான் புதிய பார்முலா.

அந்த வகையில் புதியதாக தயாராகி வருகின்ற படம்தான் "மொசக்குட்டி".

கிராமங்களில் முயல்குட்டிகளைத் தான் மொசக்குட்டி என்று சொல்வது வழக்கம்.

மொசக்குட்டி என பெயர்:

மொசக்குட்டி என பெயர்:

இந்த படத்திற்கு இயக்குனர் ஏன் மொசக்குட்டி என்று பெயர் வைத்திருக்கின்றார் என்று தெரியவில்லை.

முயல்குட்டி ஹீரோயின்:

முயல்குட்டி ஹீரோயின்:

ஒருவேளை இப்படத்தின் ஹீரோயின் மகிமா அழகாக முயல்குட்டி போல் இருப்பதாலோ என்னவோ அப்படி வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம் யாருக்கு தெரியும்.

இல்லாட்டி இப்படி இருக்கலாமோ:

இல்லாட்டி இப்படி இருக்கலாமோ:

அல்லது படத்தின் கதை முயலைப் போல துள்ளிக் குதித்து ஓடுவது போல இருப்பதால் அதை மனதில் வைத்து பெயர் வைத்திருக்கலாமோ என்னவோ தெரியவில்லை.

மைனா படத் தயாரிப்பாளர்:

மைனா படத் தயாரிப்பாளர்:

"மைனா", "சாட்டை" போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம்தான் இந்த "மொசக்குட்டி".

கதாநாயகன் வீரா:

கதாநாயகன் வீரா:

இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடித்திருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது.. மகிமா ரொம்ப அழகு.

பசுபதியின் ரோல்:

பசுபதியின் ரோல்:

உப்புதரகாசி என்ற கேரக்டரில் பசுபதி வருகிறார். காதல், ஆக்‌ஷன் படமாக தயாராகிறது.

ரமேஷ் விநாயகம் இசை:

ரமேஷ் விநாயகம் இசை:

கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஜீவன் இயக்குகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரமேஷ் விநாயகம் இசையமைக்கிறார்.

ரெண்டே கட்தானாம்:

ரெண்டே கட்தானாம்:

சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இரண்டே இரண்டு "கட்"டுகளுடன் படத்திற்கு "யு" சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர்.

காந்தி ஜெயந்திக்கு ரீலீஸ்:

காந்தி ஜெயந்திக்கு ரீலீஸ்:

படம் வருகிற அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X