சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் புது அப்டேட்
சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஈஸ்வரன் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் பத்து தல. இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார்.

லாபத்தை கொடுத்தது
கன்னடத்தில் 2017ம் ஆண்டு நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் Mufti. இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமன்றி பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல லாபத்தை கொடுத்தது.

சிம்பு, கவுதம்
இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்க சிம்பு & கவுதம் கார்த்திக் முன்னிலையில் நடிக்க பத்து தல என டைட்டில் வைக்கப்பட்டது. டீஜே, பிரியா பவானி சங்கர்,மனுஷ்ய புத்திரன், கலையரசன் உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. சிம்பு நாற்காலியில் அமர்ந்த படி இருக்கும்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
Recommended Video

புது அப்டேட்
பின்னர் இந்த படம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்இந்த திரைப்படத்திற்கான பாடல் பதிவு பணிகளை தொடங்கியுள்ளதாக புது அப்டேட் கசிந்துள்ளது.


Click it and Unblock the Notifications











