விஜய் அரசியல் பேசுவார்.. ஸ்பெஷல் கெஸ்ட் பராக் பராக்.. பிகில் பட விழாவில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மிக முக்கியமான விஷயங்கள் நிறைய நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Bigil Audio launch on september 19

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மிக முக்கியமான விஷயங்கள் நிறைய நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19ம் தேதி நடக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடக்க உள்ளது. அங்கு இருக்கும் தனியார் கல்லூரியில் இந்த விழா நடக்க உள்ளது.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

இந்த நிலையில் பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியை மிகவும் முக்கியமான விழாவாக அந்த பட குழு பார்க்கிறது. இந்த படத்தில் ரசிகர்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் செய்து இருக்கிறார்களாம். இது தொடர்பாக படக்குழுவிடம் பேசினோம். அவர்கள் சில ஷாக்கிங் அப்டேட்களை கொடுத்தனர்.

யார் வருகிறார்

யார் வருகிறார்

பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முக்கிய விருந்தினர் ஒருவரை பாலிவுட்டில் இருந்து அழைக்க இருக்கிறார்களாம். அது பெரும்பாலும் ஷாருக்கானாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள், ஷாருக் கான் உடன் படம் எடுப்பதற்காக அட்லி ஏற்கனவே பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன

அடுத்து என்ன

அதேபோல் அரசியல் தலைவர் ஒருவரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வர போகிறார் என்கிறார்கள். ஆனால் இது இன்னும் உறுதியாகவில்லை. பிகில் பட குழு இந்த விஷயத்தை மிகவும் ரகசியமாக வைத்து உள்ளது.

அரசியல் பேசுவார்

அரசியல் பேசுவார்

எப்போதும் போல பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேச வேண்டிய விஷயங்களை நடிகர் விஜய் தானாக எழுதி வருகிறார். இவர் கண்டிப்பாக மேடையில் அரசியல் பேசுவார். அவருடைய பேச்சுதான் இந்த விழாவில் முக்கியமான நிகழ்வாக இருக்க போகிறது என்றும் கூறுகிறார்கள்.

ரகுமான் என்ன

ரகுமான் என்ன

அதேபோல் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் விழா மேடையில் ஒரு பாடலை பாட உள்ளார். இதற்காக அங்கு பெரிய அளவில் ஹை குவாலிட்டி ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பாடலை அவர் பாடிய பின்தான் மற்ற பாடல்கள் வெளியிடப்படும் என்று கூறுகிறார்கள்.

சஞ்சய்

சஞ்சய்

இது இல்லாமல் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இந்த விழாவிற்கு வருவார் என்கிறார்கள். விழா மேடையில் ஏறி சஞ்சய் பேசுவதற்கும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X