''கார் வாங்கணும், கல்யாணம் பண்ணனும், புள்ள பெக்கணும்...''

By Sudha

சென்னை: முன்னாடி மாதிரியெல்லாம் இப்போது பாட்டு எழுத வேண்டியதில்லை. சொல்ல வேண்டியதை வளைத்து நெளிக்காமல் டக் டகாரென சின்னச் சின்ன வரிகளில் போட்டுத் தாக்கி விடுகிறார்கள் பாடலாசிரியர்கள். அப்படி ஒரு பாட்டு கோலாகலம் படத்தில் இடம் பெற்றுள்ளது.

அந்தப் படத்தில் நாயகனாக நடிக்கும் புதுமுகம் அமல் இந்தப் பாட்டைப் பாடியுள்ளார்.

சுரேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஜாலியான பாட்டைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்...

அமல் நடிக்கும் கோலாகலம்

அமல் நடிக்கும் கோலாகலம்

பி.ஜி.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பி.ஜி. சுரேந்திரன் கதை திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படத்திற்கு கோலாகலம் என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் அமல் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.

சரண்யாதான் நாயகி

சரண்யாதான் நாயகி

கதாநாயகியாக சரண்யா மோகன் நடிக்கிறார். இவர்கள் தவிர கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா, விகேஆர் ரகு, விஷவாந்த் என்ற வில்லன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பாட்டுக்கு விவேகா.. இசைக்கு பரணி

பாட்டுக்கு விவேகா.. இசைக்கு பரணி

இசையை பரணி கவனிக்க, பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.

சரி பாட்டு என்ன...

சரி பாட்டு என்ன...

கோலாகலம் படத்திற்காக இடம் பெற்றுள்ள அந்த ஜாலிப் பாடல் இதுதான்...

என் மைண்ட டிஸ்டர்ப் பண்ணாதே !
படிக்கனும், சம்பாதிக்கணும்
உழைக்கணும் - வீடு வாங்கணும்
கார் வாங்கணும், கல்யாணம் பண்ணனும், புள்ள பெக்கணும்
அதனால என் மைன்ட் டிஸ்டர்ப் பண்ணாதே .. இப்படிப் போகிறது அந்தப் பாட்டு.

மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்

மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்

இந்த பாடல் இளைய தலைமுறை மாணவர்களின் மன உனர்வுகளை பிரதிபலிப்பது மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் தயாரிப்பாளரும் , இயக்குனருமான பி.ஜி.சுரேந்திரன். தீபாவளி திருநாளில் திரைக்கு வருகிறதாம் கோலாகலம்.

கோலாகலமாக வரட்டும்....!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X