திருமணமான கையோடு மனைவி சோபிதாவை நாக சைதன்யா எங்க கூட்டிக்கிட்டு போயிருக்காரு பாருங்க!

ஐதராபாத்: நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத்தில் உள்ள பிரபல அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட கலர்ஃபுல் புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவை அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

திருமணத்தின் போது சோபிதா மற்றும் நாக சைதன்யாவின் காஸ்ட்யூம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் மூலம் இதை ரசிகர்கள் கண்டுகளித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பின்பு தன்னுடைய மனைவியுடன் கோயிலுக்கு நாக சைதன்யா விசிட் அடித்துள்ளார்

naga chaitanya nagarjuna

நாக சைதன்யா & சோபிதா துலிபாலா திருமணம்: நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சமந்தாவை முதல் திருமணம் செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்தை அறிவித்திருந்தார் நாக சைதன்யா. இந்நிலையில் இரண்டாவதாக சோபிதா துலிபாலாவை அவர் தற்போது திருமணம் செய்துள்ளார். முன்னதாக சோபிதாவை அவர் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இருவரும் அது குறித்து மௌனம் சாதித்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் குடும்ப அளவில் நடத்தி முடிக்கப்பட்டது.

நாக சைத்தன்யா -சோபிதா சாமி தரிசனம்: இதனிடையே, நேற்று முன்தினம் இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவின் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தன. இந்நிலையில் திருமணம் முடிந்து தன்னுடைய தந்தை நாகார்ஜுனா உடன்வர, தன்னுடைய மனைவி சோபிதாவுடன் நாக சைதன்யா கோயிலுக்கு சென்றுள்ளனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவர்கள் ஜோடியாக நடந்து சென்றது அவர்களது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மருமகளுக்கு நாகார்ஜுனா செய்த விஷயம்: இந்த வீடியோவில் நெற்றியில் திருநீறு வைத்துக் கொள்ளும் நாகார்ஜுனாவை பார்க்க முடிகிறது. இதனிடையே சோபிதாவும் திருநீறு வைத்துக் கொள்வதற்காக குனிந்த நிலையில் அருகில் இருந்த நாகார்ஜுனா, அவரது முடியை ஒதுக்குவதாக காணப்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள் அவரது அப்பா போன்ற இந்த செயல்பாட்டை ரசித்து வருகின்றனர். திருமணமான உடன் நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் கோயிலுக்கு சென்று கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றுள்ளனர். அவர்களுடன் நாகார்ஜுனா மட்டுமே சென்றுள்ளார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் யாரும் உடன் செல்லவில்லை.

நாக சைதன்யா படம்: தன்னுடைய அப்பாவை போலவே நாக சைதன்யாவும் டோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம்வந்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக தண்டெல் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படததில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புது மாப்பிள்ளைக்கு இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்த திருமணத்தை தொடர்ந்து நாகார்ஜுனா -அமலா தம்பதியின் மகன் அகிலுக்கு அடுத்த ஆண்டில் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் இவரது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X