மாலத்தீவில் ஹனிமூன்...குக் வித் கோமாளி ரித்திகாவின் கலக்கல் போட்டோஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரித்திகா மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சி பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அப்படி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. வித்தியாசமான இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதில், சமையல் செய்யும் நட்சத்திரங்களை கோமாளிகள் தொந்தரவு செய்வார்கள். அவர்களை சமாளித்து, சமையலையும் ருசியாக செய்து ஜெயிக்க வேண்டும்.

நடிகை ரித்திகா

நடிகை ரித்திகா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக பார்வையாளர்களை கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து குக் வித் கோமாளி சீசன் 2 ஆரம்பமானது. இதனால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் தற்போது சினிமாவிலும் சின்னத்திரையிலும் கலக்கி வருகின்றனர். அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்தவர் ரித்திகா.

பாக்கியலட்சுமி சீரியலில்

பாக்கியலட்சுமி சீரியலில்

நடிகை ரித்திகா சீரியல்களில் நடித்திருந்தாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

திடீர் திருமணம்

திடீர் திருமணம்

நடிகை ரித்திகா காதும் காதும் வைத்தது போல, விஜய் டிவி கிரியேட்டிவ் புரடியூசர் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் எளிய முறையிலில் நடைபெற்றநிலையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண புகைப்படத்தை நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

மாலத்தீவில் ஹனிமூன்

மாலத்தீவில் ஹனிமூன்

இந்த நிலையில் தற்போது ரித்திகா தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று உள்ளார். மாலத்தீவில் இருந்து அவர் பதிவு செய்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சோஷியல் மீடியாவில் டிராண்டான இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X