ஐயோ என்னா வெட்கம்? தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை.. புதிய புகைப்படங்களை வெளியிட்டார்!

By

மும்பை: தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்துகொண்ட நடிகை சனா கான் திருமணத்துக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இப்போது வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர், சனா கான். இதையடுத்து தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தார்.

பின்னர், நடிகர் விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

Save a child's life. Please Donate!

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்த சனா கான், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக பிரபலமடைந்தார். பிறகு சல்மான் கானுடன் ஜெய் ஹோ என்ற இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து மேலும் சில இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடன இயக்குநர்

நடன இயக்குநர்

பின்னர் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் அவர் மும்பையை சேர்ந்த நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இந்த கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் இருவரும் திடீரென பிரிந்தனர். அதற்கு மெல்வின் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறியிருந்தார்.

ஒருவர் மீது ஒருவர்

ஒருவர் மீது ஒருவர்

பிறகு இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் சோசியல் மீடியாவில் புகார் கூறிக்கொண்டனர். இதற்கிடையே கடந்த மாதம், சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சனா. 'சினிமா வாழ்க்கையை விட்டு விலகி, மனித குலத்துக்கு சேவை செய்ய விரும்புகிறேன். என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க, இந்த சேவையை செய்ய விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

இந்நிலையில் அவர் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை கடந்த 20 ஆம் தேதி ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கணவரின் கையை பிடித்தபடி மாடிப்படியில் இருந்து இறங்கி வருவது போலவும் கேக் வெட்டுவது போலவும் அந்த வீடியோ காட்சி இருந்தது.

Recommended Video

அடடா என்ன க்யூட்.. சனா சிங் இன்ஸ்டாவில் பகிர்ந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோ
மெஹந்தி விழா

மெஹந்தி விழா

பின்னர் கணவருடன் அவர் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அவை வைரலாயின. இப்போது, திருமணத்துக்கு முன் மெஹந்தி விழாவின் போது அவர் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்களையும் அவர் இப்போது வெளியிட்டுள்ளார். மெஹந்தி வீடியோவில் அவர் ஓவராக வெட்கப்படுகிறார். இந்த புகைப்படங்களும் இப்போது வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X