கல்யாணம் முடிந்த கையோடு மங்காத்தா ரீ ரிலீஸ்க்கு வந்த புதுமணத் தம்பதியர்.. அவ்வளவு வெறி மாப்பிள்ளை!

சென்னை: அஜித்தின் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகி வெகு விமர்சையாக ஓடிக் கொண்டு உள்ளது. மங்காத்தா படம் இப்போது தான் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது போல அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். படம் கடந்த வெள்ளிக்கிழமை ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் இன்று இரவு வரை பல தியேட்டர்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஹவுஸ் ஃபுல் ஷோக்களால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படி இருக்கையில் வெள்ளிக்கிழமை காலையில் திருமணத்தை முடித்த கையுடன் புதுமணத் தம்பதியர்கள் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் காட்சியைப் பார்க்க வந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Newly Wedding Couples Went Mankatha Re Release FDFS After Their Knot - Video Attracts Social

கடந்த 2011ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளியான அஜித்தின் 50வது படம் மங்காத்தா. படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது. இந்த படம் தமிழ் சினிமாவில் எந்த கதாநாயகனும் நடிக்கத் தயங்கும் கதை மற்றும் கதாபாத்திரம். ஆனால் வில்லனிசமான கதாபாத்திரம் என்றால் நான் அசால்ட்டாக கேண்டில் செய்வேன் என்று அஜித்துக்கு இருக்கும் போல. காரணம் அந்த அளவுக்கு அஜித் தனது விநாயக் மகாதேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மங்காத்தா ரீ ரிலீஸ்: படத்தின் ரீ ரிலீஸ்க்காக ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருந்தார்கள். ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நிறைவேற்றி உள்ளது. படம் கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ரீ ரிலீஸையே ரசிகர்கள் புது படம் ரிலீஸ் போல மாற்றிவிட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். மேள தாளம், பட்டாசு, பால் அபிஷேகம், கேம்பா அபிஷேகம் என தியேட்டரையே கதி கலங்க வைத்து விட்டனர். பல தியேட்டர்களில் படத்தில் இடம்பெற்றுள்ள மச்சி ஓபன் த பாட்டில் பாடலை சுமார் ஐந்து முறை வரை ஒன்ஸ் மோர் போட்டுள்ளார்கள்.

Newly Wedding Couples Went Mankatha Re Release FDFS After Their Knot - Video Attracts Social

புதுமணத் தம்பதியர்: இப்படி இருக்கையில் புது மணத் தம்பதியர் தங்களது திருமணம் முடிந்த கையுடன் மங்காத்தா படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு சென்றுள்ளனர். அதாவது, தாலி கட்டி முடித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி என்று கிண்டலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X