சினிமேக்ஸ் நிகழ்ச்சியில் கமலியிடம் கேளுங்கள்… நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புது முயற்சி !
சென்னை : காதல் கோட்டை 25 ஆண்டு வெள்ளிவிழா கண்டுள்ளது. அதனை கொண்டாடும் வகையில் "கமலியிடம் கேளுங்கள்" என்கிற நிகழ்ச்சியினை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது.
காதல்கோட்டை பாணியில் கடிதம் மூலம் ரசிகர்கள் கேட்டுகும் கேள்விக்கு தேவயானி பதிலளிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு மாலை 5:30 மணிக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

கடிதத்தில் காதல்
ரோமியோ ஜூலியட் காதல், அம்பிகாபதி அமராவதி காதல்,மோதலில் தொடங்கும் காதல், பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் காதல் என பல காதல்களை பார்த்த நமக்கு, பார்க்காமல் காதல், கடிதத்தின் மூலம் காதல் என ஒரு புதுவித அனுபவத்தை தந்த திரைப்படம் காதல் கோட்டை .

கமலியிடம் கேளுங்கள்
அஜித், தேவயானி நடித்த காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அதனை கொண்டாடும் வகையில் "கமலியிடம் கேளுங்கள்" என்கிற நிகழ்ச்சியினை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது.

தேவயானி பதிலளிக்கிறார்
அந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக , ரசிகர்கள், நடிகை தேவயானியிடம் காதல் கோட்டை படம் சம்பந்தப்பட்ட கேள்வியினை, காதல் கோட்டை பட பாணியில் கடிதம் மூலம் எழுதி, அனுப்பலாம் என்று கூறப்பட்ட நிலையில், வந்த கடிதங்களில் இருந்து 25 கடிதங்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அதில் இருக்கும் கேள்விகளுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் 'சினிமேக்ஸ்' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பதில் அளிக்க உள்ளார்.

ஞாயிறு மாலை 5.30 மணிக்கு
மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, வரும் ஞாயிறு மாலை 5:30 மணிக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி நிவேதிதா தொகுத்து வழங்க, இயக்குனர் கமல் இயக்குகிறார்.


Click it and Unblock the Notifications











