சூர்யா மகன் பற்றி பரவிய செய்தி வதந்தி தான்.... 2டி நிறுவனம் விளக்கம்!

சூர்யா மகன் தேவ் ஹீரோவாக நடிக்கப்போவதாக வெளியான செய்தி தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை: சூர்யா - ஜோதிகா மகன் தேவ் சினிமாவில் நடிக்கவில்லை என தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சூர்யா - ஜோதிகா நட்சத்திர தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் தேவ் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவியது.

News about Surya son is false

அறிமுக இயக்குநர் இயக்கும் அப்படம், நாய்க்குட்டிக்கும், சிறுவனுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறப்பட்டது.

கதை பிடித்து விட்டதால் அப்படத்தில் தேவ்வை நடிக்க வைக்க ஜோதிகாவும், சூர்யாவும் முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்தத் தகவலை சூர்யாவின் 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் மறுத்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இது தவறான தகவல். வதந்திகளைப் பரப்பாதீர்கள்' என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சூர்யா மகனும் நடிகனாகிறார் என்ற தகவல் பொய்யானது என்பது உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X