பொத்திகிட்டு போ... ஃபேஸ்புக்கில் வம்பிழுத்த நபருக்கு பாத்திமா பாபு சரியான பதிலடி!

சென்னை : ஃபேஸ்புக்கில் கடுப்பேத்தும் கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு பாத்திமா பாபு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

தூர்தர்ஷனில் மூத்த செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு.

இவர் கே.பாலச்சந்தரின் கல்கி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

News reader and actor fathima babu reply to worst comment

பாத்திமா பாபு : அழுத்தம் திருத்தமாக தமிழை உச்சரித்த செய்திவாசிப்பாளர்களில் முக்கியமானவராக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் செய்திவாசிப்பில் பிரபலமானதைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கால்பதித்தார். இதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை : இதையடுத்து, சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற இவர், 20 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பாத்திமா பாபு அவ்வப்போது அரிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

உங்கள் கணவர் இந்துதானே : இந்நிலையில், பாத்திமா பாபுவிடம் நெட்டிசன் ஒருவர் வம்பு இழுக்கும் வகையில் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதில், இந்துவான பாபு என்பவரை திருமணம் செய்துகொண்டீர்கள் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஏன் இந்து பெயர் வைக்கவில்லை என்று ஒருவர் கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த பாத்திமா என் கணவருக்கே அது பற்றி எதுவும் பிரச்சனை இல்லாதபோது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார்.

News reader and actor fathima babu reply to worst comment

பொத்திக்கிட்டு போ : இதற்கும் அசராத அந்த இணையவாசி தவறாக நான் எதையும் கேட்கவில்லையே மேடம் என்று கூற, நான் ஒரு இந்துவை பள்ளி வாசலில் நிக்கா பண்ணிக்கிட்டதால் இஸ்லாமிய பெயர்கள் இருக்கிறது பொத்திக்கிட்டு போகவும் என்று பதில் அளிக்க. அதற்கு, அந்த நபர் பொது மேடையில் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூற, டென்ஷனான பாத்திமா பாபு, பொதுமேடையில் என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களோ.. பொது மேடையாம்ல பொது மேடை என கோபமாக பதில் அளித்துள்ளார்.

இரண்டு மகன்கள் : நடிகை பாத்திமா, பாபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகு ஆஷிக் மற்றும் ஷாருக் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் ஜெயடிவியில் செய்திவாசிப்பாளராக இருந்த போது, அ.தி.மு.கவில் இணைந்தார். மேலும், இவர், அதிமுகவின் தலைமைப் பேச்சாளர்களாக 2013ம் ஆண்டு செயலலிதா நியமித்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X