56 வயதில் அசால்ட்டாக கால்களை விரித்து அமர்ந்த செய்தி வாசிப்பாளர்... தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: பிரபல செய்தி வாசிப்பாளரான ஃபாத்திமா பாபு கால்களை விரித்து அசால்ட்டாக அமரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூர்தர்ஷன் தமிழில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் ஃபாத்திமா பாபு. பின்னர் ஜெயா டிவியிலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
இயக்குநர் பாலச்சந்தரின் கல்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார் ஃபாத்திமா பாபு. தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மேடை நாடகங்கள்
தமிழ் மட்டுமின்றி ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் ஃபாத்திமா பாபு. அதோடு பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஃபாத்திமா பாபு. மேலும் பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். சில சர்ச்சைகளிலும் ஃபாத்திமா பாபுவின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அந்த சர்ச்சைகளை எல்லாம் மறுத்தார் ஃபாத்திமா.

ஓபிஎஸ்க்கு ஆதரவு
அரசியலும் உள்ள ஃபாத்திமா பாபு அதிமுகவின் பேச்சாளராகவும் உள்ளார். தற்போதைய துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தனி அணி ஆனார். அப்போது அவருக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணியில் சேர்ந்தார் ஃபாத்திமா பாபு.

முதல் ஆள்..
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஃபாத்திமா பாபு. முதல் ஆளாய் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஃபாத்திமா பாபு, முதல் ஆளாய் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை மிகவும் நேர்மையாகவும் பொறுமையாகவும் நடந்து கொண்டார்.

வைரல் வீடியோ
இதானல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இரண்டு கால்களையும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல் விரித்து அசால்ட்டாக உட்காருகிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











