அட.. இந்த இளம் நியூஸ் ரீடரோடு கணவர் ஒரு குழந்தை நட்சத்திரமா.. ஆனா இப்படி ஒரு சோகம் இருக்கே!

சென்னை: சன் டிவியின் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தனது கணவர் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

Anitha Sampath Bigg Boss ல் கலந்துகொள்ள போகிறாரா? | 4th October 2020

சன் தொலைக்காட்சியின் இளம் செய்தி வாசிப்பாளர்களில் ஒருவர் அனிதா சம்பத். பல ஆண்டுகளாக சன் டிவியின் மெயின் நியூஸில் செய்தி வாசித்து வரும் அனிதா சம்பத் பல படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்து இதுவரை எதுவும் பேசாத அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் குறித்து ஒரு உருக்கமாக தகவலை பகிர்ந்துள்ளார்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

அனிதா சம்பத் கடந்த ஆண்டுதான் பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தனது கணவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் என்று கூறி அவரது போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

நிறைய பேருக்கு தெரியாது

நிறைய பேருக்கு தெரியாது

அதோடு தனது கணவரின் கனவு குறித்தும் அது இதுவரை நடக்காமல் போனது குறித்தும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, சர்ப்ரைஸாக இந்த போட்டோ கிடைத்தது. பிரபாவின் குழந்தை பருவ தகவல்கள்..
பிரபா ஒரு குழந்தை நட்சத்திரம்.. நிறைய பேருக்கு தெரியாது.. சொல்ல போனா எனக்கே தெரியாது..கல்யாணம் வரைக்கும் சொல்லாம.. சர்ப்ரைஸா கல்யாணத்துக்கு அப்பறம் குழந்தையா நடிச்ச சீரியல் சீன்லாம் டவுன்லோட் பண்ணி வச்சி காட்டினாங்க..

நடிப்பு கத்துக்கிட்டாங்க

நடிப்பு கத்துக்கிட்டாங்க

திரைப்படத்துல நடிக்கனும்ங்கிறது சின்ன வயசுல இருந்து பிரபாவோட கனவு..என் மாமனாருக்கும் பிரபாவ சின்ன,பெரிய திரைல பாக்கணும்னு ரொம்ப ஆச..கடைசி வரைக்கும் அதை பாக்காமயே போய்ட்டாங்க.. நடிப்புக்கான திறமைய வளத்துக்க முறையா நடிப்புலாம் கத்துங்குட்டாங்க பிரபா. இன்னும் நடிகர் சங்க உறுப்பினரும் கூட..

ரெக்கமெண்டேஷன்..

ரெக்கமெண்டேஷன்..

குழந்தை நட்சத்திரமா ரொம்ப சின்ன சின்ன வாய்ப்பு மட்டும் தான் பிரபாவுக்கு கிடைச்சுது.. அவர் திறமைக்கான வாய்ப்பு கிடைக்கவே இல்ல.. காரணம்-1 அந்த காலத்துல ரெக்கமெண்டேஷன் இருக்கிற குழந்தைகளுக்கு தான் முதல் வாய்ப்பு..

கலருக்குதான் முக்கியத்துவம்

கலருக்குதான் முக்கியத்துவம்

காரணம்-2 பிரபாவோட திராவிட நிறம் இன்னொரு தடை.. நம்ம 90ஸ் கிட்ஸ் டைம்லலாம்.. விளம்பரங்கள் சீரியல்ன்னாலே கலருக்கு தான் முக்கியத்துவம் அதிகமா இருந்துச்சு... இதை கடந்து வந்து காலம் மாறுறதுக்குள்ள பிரபா வளர்ந்துட்டான்..
அந்த கனவு மறைஞ்சி.. குடும்ப பொறுப்பு.. மாத சம்பள வேலைனு வாழ்க்கை அப்படியே ஓடி போச்சு..

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

இதெல்லாமே திருமணத்துக்கு பிறகு பிரபா ஷேர் பண்ணது தான்.. கிராபிக் டிஸைனரா இருந்தாலும்..பிரபாவுக்கு அவ்ளோ ஆழமான சினிமா அறிவு!! கும்கி, காஞ்சனா2, வாகை சூடவா, வேட்டைக்காரன் மாதிரி நிறைய திரைப்படங்களுக்கு கிராஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க.. ஆனா அதலாம் அவங்க வேலை!! அதை தாண்டி இப்ப செய்யணும்னு ஆசைப்படுற விஷயங்கள சீக்கிரமே செய்ய வாழ்த்துகள்!!

சந்தோஷப்பட்டு இருப்பார்

சந்தோஷப்பட்டு இருப்பார்

காப்பான் படம் திரையில பாக்கும் போதும் பிரபா வீட்ல இதான் சொன்னாங்க..பிரபா அப்பா இருந்து இருந்தா என் பையன தான் பெரிய நடிகர்களோட வெள்ளித்திரையில பாக்க முடியல..என் மருமகளையாவது பாக்குறனேனு சந்தோஷப்பட்டு இருப்பாருனு..! இவ்வாறு உருக்கமாக தனது கணவர் குறித்து பதிவிட்டுள்ளார் இந்த க்யூட் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X