ஏதோ ஒரு கேவலவாதி பார்த்த வேலை இது.. கொதித்த பிரபல செய்தி வாசிப்பாளர்.. என்ன மேட்டருன்னு பாருங்க!
சென்னை: தன்னுடைய பெயரில் போலி கணக்கு தொடங்கி திரைப்படங்களை தரக்குறைவாக விமர்சித்த நபரை செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் விளாசியிருக்கிறார்.
Recommended Video
நடிகர் ஜீவா நடித்து கடந்த வாரம் வெளியான படம் ஜிப்ஸி. இந்தப் படத்தை ஜோக்கர், குக்கூ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கியுள்ளார்.
இதில் நடிகர் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஷ், சன்னி வயன், சுஷீலா ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு செல்வகுமார் எஸ்கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ப்ளு சட்டை மாறன்
படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் அதிகளவான காட்சிகள் சென்சார் செய்யப்பட்டுள்ளது. வாரணாசி மதக்கலவரத்தை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜிப்ஸி படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒன்றாக எழுந்தது. ஜிப்ஸி படத்தை தரக்குறைவான வார்த்தைகளால் இழிவாக விமர்சித்திருந்தார் ஆன்லைன் விமர்சகரான ப்ளு சட்டை மாறன்.

ஸ்டாலின் ஆதரவு
அதேநேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசனும் ஜிப்ஸி படத்தை பாராட்டியுள்ளார். படக்குழுவினரை நேரில் அழைத்தும் நடிகர் கமல் பாராட்டினார்.

வாழ்த்துகள்
அதோடு 'ஜிப்ஸி' பார்த்துவிட்டு "மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்து நொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்குத் தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் 'ஜிப்ஸி' படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என்றும் அறிக்கை வெளியிட்டார்.
பக்கத்து வீட்டுக்காரனை..
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான அனிதா சம்பத்தின் பெயரில் ஜிப்ஸி படத்தை கடுமையாக விமர்சித்தும் திரௌபதி படத்தை பாராட்டியும் டிவிட் ஒன்று வைரலானது. இதனை பார்த்த திரௌபதி இயக்குநர் மோகன் ஜி, அனிதா சம்பத்திற்கு நன்றி கூறியிருந்தார்.

அனிதா விளக்கம்
அனிதா சம்பத்தின் இந்த டிவிட் பதிவை கண்டித்தும் ஆதரித்தும் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் டிவிட்டர் வலைதளத்தில் தனது பெயரில் உலா வரும் கணக்கு போலியானது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார் அனிதா சம்பத்.

கோழைத்தனமா..
இதுதொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, ஃபேக் அக்கவுண்ட்.. அவ்ளோ தான் சொல்ல முடியும்..ஏதோ ஒரு கேவலவாதி அவன் சொல்ல நினைக்கிற எல்லாத்தையும் கோழைத்தனமா என் பெயர பயன்படுத்தி சொல்லிட்டு இருக்கான்..ஐய்யயோ இது நான் இல்லனு கதறி அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பல.. ப்ளீஸ் இந்த அக்கவுண்ட்டை அன்ஃபாலோ பண்ணுங்க.. என்னுடைய ஒரிஜினல் அக்கவுண்ட் சேர்க்கப்படும் என கூறியுள்ளார்.

ஃபேக் அக்கவுண்ட்
மேலும் தனது பெயரில் பதிவான டிவிட்டர் பதிவையும் அதற்கு திரௌபதி இயக்குநர் நன்றி கூறியதையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்தும் ஃபேக் அக்கவுண்ட் என ஷேர் செய்திருக்கிறார் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், விஜயின் சர்க்கார், ரஜினிகாந்தின் தர்பார் மற்றும் சூர்யாவின் காப்பான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் அனிதா சம்பத். அனிதா சம்பத்திற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











