இந்த நியூஸ் ரீடருக்கு கல்யாணம் ஆயிடுச்சு! ஒரே ஆட்டம்பாட்டம்தான்.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்திற்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் அவரது கல்யாண போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

நடிகர், நடிகைகள், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் என செலிபிரிட்டிகளுக்கு திருமணம் என்றால் அது குறித்த தகவல்களை அறியவும் அவர்களின் லைஃப் பார்ட்னர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கும் ரசிகர்களுக்கு ஆர்வமாக இருக்கும்.

இதுபோன்று வெளியாகும் போட்டோக்களை ரசிக்கும் ரசிகர்கள் அவற்றை வைராலாக்கி விடுவார்கள். அந்த வகையில் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் திருமண போட்டோக்களும் வைரலாகியுள்ளது.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

அனிதா சம்பத் விஜயின் சர்கார் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து பட வாய்ப்புகள் வர அவர் தொடர்ந்து படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

டிவிட்டரில் போட்டோ

டிவிட்டரில் போட்டோ

இந்நிலையில் அனிதா சம்பத்திற்கு திடீரென திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த போட்டோக்களை அனிதா சம்பத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஃபைனலி பிளஸ்டு

திருமணம், ரிசெப்ஷன் நிகழ்வுகளின் சில போட்டோக்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஃபைனலி பிளஸ்டு என பதிவிட்டு அனிதா சம்பத் தனது திருமண போட்டோக்களை பதிவிட்டிருக்கிறார்.

இருவரும் நடனம்

மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்றுள்ள அன்பில் அவன் பாடலுக்கு இருவரும் நடனமாடியுள்ளனர். அந்த வீடியோவையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அதிகம் ஷேர்

அதிகம் ஷேர்

இதனை பார்த்த ரசிகர்கள் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் திருமண போட்டோக்களையும் அதிகம் லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X