அதுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம்.. பிக்பாஸில் அனிதா சம்பத்.. ஹீரோயினாவே நடிக்கலாம்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 4ல் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பங்கேற்றுள்ளார்.
Recommended Video
சன் தொலைக்காட்சியில் மெயின் நியூஸில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார் அனிதா சம்பத்.
வணக்கம் தமிழா வானிலை அறிக்கை வரை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் அனிதா சம்பத்.

படங்கள்
எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் மகளான அனிதா சம்பத், செய்தி வாசிப்பாளராக மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
காலா, 2.0, காப்பான், ஆதித்ய வர்மா, தர்பார், டேனி உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரங்களிலும் செய்தியாளராகவும் நடித்துள்ளார் அனிதா சம்பத்.

திருமணம்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அனிதா சம்பத், அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். கடந்த ஆண்டுதான் அனிதா சம்பத், பிரபா என்பவரை திருமணம் செய்தார்.

கணவர் குழந்தை நட்சத்திரம்
தனது கணவர் ஒரு சினிமா குழந்தை நட்சத்திரம் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்த அனிதா சம்பத், அவரது கனவு குறித்தும் உருக்கமான பதிவு ஒன்றை அண்மையில் ஷேர் செய்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் அனிதா சம்பத்.

பட படவென பேசினார்
க்யூட்டான உடையில் பொம்மை போன்று அவ்வளவு அழகாக உள்ளார் அனிதா சம்பத். பிக்பாஸ் மேடையில் கமலுக்கு பேச வாய்ப்பே கொடுக்காமல் எண்ணெயில் போட்ட கடுகை போல படபடவென பொறிந்து தள்ளிவிட்டார் அனிதா சம்பத்.

ரேகா புகழாரம்
பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயும் சக போட்டியாளர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். நடிகை அனிதா சம்பத்தை பார்த்து பொம்மை போன்று இருப்பதாக புகழாரம் சூட்டினார் நடிகை ரேகா.


Click it and Unblock the Notifications











