பொறுக்கி மாதிரி இருக்க..படுமோசமான கமெண்டிற்கு அனிதா சம்பத்தின் அசால்ட்டான பதில்!
சென்னை : சோஷியல் மீடியாவில் படுமோசமான கமெண்டிற்கு அனிதா சம்பத் அசால்ட்டாக பதிலடி கொடுத்துள்ளார்.
அனிதா விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் செய்தியாளராக நடித்திருந்தார்.
மேலும் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத்.

அனிதா சம்பத் :
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், தனது வேலையை விட்டுவிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே ஓவராக பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். என்னத்தான் ஓவராக பேசினாலும், டாஸ்கில் நேர்மையாக விளையாடியதால் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி :
அதே போல ஆரி அனிதாவின் கணவர் குறித்து விளையாட்டாக ஏதோ சொல்ல, ஏதோ கொலை செய்தது போல வானத்திற்கும் பூமிக்கும் குதித்து, அவரை ஒருமையில் திட்டி படுமோசமாக நடந்து கொண்டார். இதனால் அனிதா மீது கடுப்பான நெட்டிசன்ஸ் அவருக்கு ஓட்டு போடாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர்.
யூடியூப் சேனல் :
இதனை தொடர்ந்து வெளியே வந்த அனிதா புதிதாக யூடியூப் சேனல் தொடங்கி அதில், அழகு பராமரிப்பு, வீட்டுக்குறிப்பு என பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல விஜய் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு டான்சும் ஆடத்தெரியும் என்பதை நிரூபித்தார்.

காதல் திருமணம் :
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா, தனது கணவர் பிரபாகரன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். எப்போதும் கணவருடன் சேர்ந்து வீடியோ வெளியிடுவது போட்டோக்கள் வெளியிடுவது என இருந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் கூட தனது காதல் கணவர் பற்றி பேசிக் கொண்டே இருந்தார்.
பொறுக்கி மாதிரி இருக்கு :
அண்மையில் அனிதா தனது, இன்ஸ்டாகிராமில்,ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு இணையவாசி ஒருவர் பக்கா பொறுக்கி மாதிரி இருக்கு என்று படு மோசமாக கமெண்ட் பதிவிட்டு இருந்தார். அதற்கு நான்கு பேர் லைக் கொடுத்து இருந்தனர். அதற்கு பதில் அளித்த அனிதா சம்பத், உன்னை யாரோ இப்படி சொல்லி இருப்பாங்க போல அதை இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் பட்டிருக்கிற, உனக்கு லைக் போட்டவனும் எங்கேயோ செம்மையா அடி வாங்கி இருப்பான் போல என்று சிரிக்கிற இமேஜ் வைத்து கலாய்த்து வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











