அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ரெடியானு ஓபனா கேட்டாங்க.. செய்திவாசிப்பாளர் வேதனை!
சென்னை : அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ரெடியானு ஓபனாக கேட்டாங்க என்று செய்திவாசிப்பாளர் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
தமிழ் செய்தி வாசிப்பாளரான மெர்சி சித்ரா, அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மெர்சி சித்ரா, செய்திவாசிப்பது குறித்து பேசி உள்ளார்.

செய்திவாசிப்பாளர் மெர்சி : அதில், செய்திவாசிப்பது ஒன்றும் ஈஸியானது இல்லை, அதற்காக முறைப்படி பயிற்சி எடுத்து இருக்க வேண்டும். எல்லா செய்திகள் பற்றியும் நாம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். திடீரென நேரலை வரும் போது, அது தொடர்பான கேள்வியை செய்தியாளரிடம் கேட்க முடியும். செய்தி வாசிப்பதோடு வேலையை முடிப்பதில்லை. செய்திக்கான வாய்ஸ் ஓவர் தருவது, ஸ்கிரிப்ட் எழுதுவது என பல வேலைகள் இருக்கிறது என்றார்.
நடிக்க ஆசைபட்டேன்:மேலும்,சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த போது, அங்கு பிரச்னைகள் இருக்கும் என எனக்கு தெரியாது. காரணம், மீடியாவில் நான் வரும் போதும் இப்படி தான் சொன்னார்கள். ஆனால் மீடியாவில் நான் வந்த பின் அப்படி எதுவும் இல்லை. அப்படி தான் சினிமாவிலும் இருக்கும் என நினைத்தேன்.

அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகேவா? : அசட்டு தைரியத்துடன் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போது பலவிதமான எதிர்ப்பை சந்தித்தேன். எப்போதும் இன்டர்வியூவில் கேள்வி கேட்பது போல, அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும் ஓகேவா? என்று ஓப்பனாக கேட்டார்கள். ஏன் என்றால் பல பெண்களை அம்மாவே அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்து வரும் போது, நான் ஏன் உங்களை தேர்வு செய்ய வேண்டும் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகேவானு கேட்டார்கள்.
நடிக்கவே வேண்டாம் : இதுபோன்று பல இடத்தில் கேட்டதால், ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். சினிமாவிற்கு போனதால்தானே இப்படி எல்லாம் பேசுகிறார்கள். இனிமேல் நடிக்கவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன், தேடிய போது கிடைக்காத வாய்ப்பு, தேடாத போது தெரிந்தவர்கள் மூலம் தேடி வந்தது. அது தான் துணிவு படத்தில் அதுவும் அஜித் சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு.

பத்தில் நானும் ஒருத்தி : துணிவு படத்தின் கதை சொன்ன போது, நீங்க தான் மெயின் ரிப்போர்ட்டர், நீங்க தான் முக்கியமான கதாபாத்திரம் என்றார்கள். அங்கு போன பிறகு தான் தெரிந்தது, பத்தில் நானும் ஒருத்தி என்று. காலை 9 மணியிலிருந்து, மாலை 6 மணி வரை வெயிலில் நிற்போம். மே மாதத்தில் தினமும் மேக்கப் போட்டு, ஷூட் முடிந்து சென்னை வரும் போது இன்னும் கருப்பாக ஆகிவிட்டேன்.


Click it and Unblock the Notifications











