மோசமான பசங்களை தேடி காதலிப்பீங்களா? இன்ஸ்டாவில் விளாசிய பனிமலர் பன்னீர்செல்வம்!
சென்னை: பெண்கள் எப்போதும் மோசமான பசங்களைத்தான் தேடி காதலிப்பீங்களா என்று செய்திவாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பனிமலர் பன்னீர்செல்வம் சன் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக தன்னுடைய பணியைத் தொடங்கினார்.
அதன் பின்னர் பாலிமர் தொலைக்காட்சி, புதிய தலைமுறை, நியூஸ் செவன் என பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.

பனிமலர் பன்னீர்செல்வம்: பெண்ணியம் பற்றி பேசி வரும், தீவிர பெண்ணிய வாதியாக தன்னை சித்தரித்துக் கொண்டிருக்கும் பனிமலர் பன்னீர்செல்வம், கடை திறப்பிற்கு அழைத்தனர். ஒரு நாள் கடையில் தங்க வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று வாட்ஸ் அப்பில் ஒருவர் பனிமலருக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார்.
துணிச்சலான பெண்: அந்த மெசேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தார். மிகவும் துணிச்சலான பெண்ணான இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில், ஏய் உங்களத்தான் என்று பேசத் தொடங்கிய பனிமலர், குடிகாரன், மோசமானவனைத்தான் தேடி காதலிப்பீங்களா, அப்புறம் அவன் என் காசை புடுங்கீட்டான், ஏமாத்திட்டான் என்று புலம்ப வேண்டியது.

வொர்க் அவுட் ஆகாது: பெண்கள் எல்லாம் மனசுல என்ன நினைச்சீட்டு இருக்கீங்க, சினிமாவில் காட்டுவது போல ஆன்ட்டி ஹீரோதான் சினிமாவில் மாஸ் என்று நினைச்சிட்டு லவ் பண்ணுவீங்களா? இந்த மாதிரி ஆண்களை ஒழுங்குப்படுத்தி, திருத்தி, பல பெண்களை காதலித்து ஏமாற்றியவனை உண்மையாக காதலித்து திருமணம் செய்ய வேண்டும் பெண்கள் மனதில் நினைத்து இருந்தால், இது எதுவுமே வொர்க் அவுட் ஆகாது.
புதைகுழி விழாதீங்க: நீங்க மேலும் மேலும் புதை குழியில் தான் விழுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எத்தனையோ நல்ல பெண்ணுங்க, எத்தனையோ நல்ல பையன்கள் இருக்கிறார்கள். அதைவிட்டுவிட்டு கேடுகெட்ட மோசமான ஆண்களை திருத்துவது நம் வேலை இல்லை என்று பனிமலர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











