சமைக்கவே தெரியாத பிரியங்காவிற்கு டைட்டிலா? குக் வித் கோமாளியை பார்க்கவே பிடிக்கல!

சென்னை: மணிமேகலை பிரியங்கா சண்டை விவகாரம் பெரும் புயலை கிளப்பி ஒட்டுமொத்த சோசியல் மீடியாவும் இதுகுறித்து பேசி வரும் நிலையில், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், குக் வித் கோமாளியை பார்க்கவே பிடிக்கல, எந்த சீசனிலும் இல்லாத கொடுமை இதில் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் அடுத்த வாரத்தோடு முடிவடைய உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலை, பிரியங்காவுடனான சண்டை காரணமாக நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய, மணிமேகலை, 2019ம் ஆண்டில் இருந்து குக் வித் கோமாளியில் இருக்கிறேன். அதில், நான்கு முறை கோமாளியா இருந்து இருக்கிறேன். இரண்டு முறை தொகுப்பாளினியாக இருந்து இருக்கிறேன்.

cooku with comali 5 priyanka deshpande manimegalai 5

குக் வித் கோமாளி சீசன்: என் வேலையை செய்யவிடாமல், அவர் தான் பெரிய தொகுப்பாளினி போல பல விஷயத்தில் மூக்கை நுழைந்தார். இதுகுறித்து, புகார் கூறிய போதும் என்னை தான் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். இல்லை என்றால் என் கேரியரே பாதிக்கும் என்றார்கள். நான் எதுவானாலும் பரவா இல்லை என்று வெளியில் வந்தவிட்டேன் என்று பேசி இருந்தார். அவரின் பதிவினைப் பார்த்த பலர், உண்மையில் பிரியங்கா அப்படி பட்டவர் தான் என்றும், அவரால் பல தொகுப்பாளினிகளுக்கு வாழ்க்கையே போச்சு என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பார்க்கவே பிடிக்கல: இந்த பிரச்சனை குறித்து பேசிய செய்தியாளர் ரஞ்சித், நான் குக் வித் கோமாளி ரசிகன், நான்கு சீசன்களையும் நான் பார்த்து இருக்கிறேன். மற்ற சீசனில் பாபா சங்கர் புகழை அடிப்பது, தூக்கிக்கொண்டு ஓடுவது எல்லாம் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும். ஆனால், இப்போது இர்பான், மற்றவர்களை அடிப்பதை பார்க்கும் போது எரிச்சலாக வருகிறது. ஏன் என்றால், அவரின் டாமினேஷன் அதில் தெரிகிறது. அதற்கு காரணம் அவர் வந்ததுமே பிரியங்காவை அக்கா என்று காக்கா பிடித்துவிட்டார். பிரியங்காவும் தம்பி என்று பாச மழை பொழிந்து பாதுகாப்பாகி விட்டார். இதைப்போல மணிமேகலையும் இருக்க வேண்டும் என நினைத்தார் ஆனால் அது நடக்கவில்லை.

அவருக்கு எதுக்கு டைட்டில்: சமைக்கவே தெரியாத பிரியங்காவிற்கு எப்படி டைட்டில் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அவங்களுக்கே டைட்டில் கொடுத்ததற்கு எதற்கு ஷோ நடத்தினார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை அவர் நன்றாக சமைத்து இருக்கலாம். வாய்ப்பு கொடுத்தவர்களுக்கே திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுத்தால் அடுத்தவன் எப்படி பிழைப்பான். மணிமேகலை விஷயத்தில் சேனல் மேலைவயும் தப்பு இருக்கும், நிகழ்ச்சி தயாரிப்பு மேலையும் தப்பு இருக்கு. இவர்கள் இரண்டு தரப்பிடமும் விசாரித்து இருக்க வேண்டும். ஆனால், இதுக்கு மேல ஷோவே பண்ண முடியாது என்று மணிமேகலையை எப்படி மிரட்டலாம் என்று செய்தியாளர் ரஞ்சித் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X