மணிரத்னம் வழங்கும் பாரடைஸ்.. ஆசிய திரைப்பட விருதுகளில் எத்தனை பிரிவுகளில் போட்டி தெரியுமா?
சென்னை: நியூட்டன் சினிமா தயாரிப்பில் வெளியான பாரடைஸ் படம் ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டர் ஆகிய 4 பிரிவுகளில் பரிந்துரைகளை பெற்றுள்ளது. இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய திரைப்பட விருதுகள் விழா சினிமா துறையினரால் கௌரவமிக்க ஒன்றாக கருதப்படுகிறது. அந்தவகையில் 17வது ஆசிய திரைப்பட விருதுகளில் நான்கு பிரிவுகளில் பாரடைஸ் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் பிரசன்ன விதானகே, சிறந்த திரைக்கதை பிரசன்னா விதானகே மற்றும் அனுஷ்கா சேனநாயக்க மற்றும் சிறந்த எடிட்டிங் ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சினிமா சாதனைகள், கலாசார பன்முகத்தன்மை மற்றும் திறமைகளை சிறப்பித்துக் காட்டும் வகையில் புகழ்பெற்ற ஆசிய திரைப்பட விருதுகள் அகாடமியால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

முக்கிய அம்சம்: இந்த ஆசிய திரைப்பட விருதுக்கு ஒரு படம் பரிந்துரைக்கப்படுவது ஒரு படத்தின் வெற்றி மற்றும் தரத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. முக்கிய பிரிவுகளில் பாரடைஸ் படம் பல விருதுகளுக்கு ஆசிய திரைப்பட விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டது படத்தின் தரம் மற்றும் தகுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சிறந்த படம்: பாரடைஸ் திரைப்படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் (கிம் ஜிசோக்) விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் பிரசன்ன விதானகேவும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவை தவிர்த்து ஐந்து NETPAC விருதுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.
சிறந்த திரைக்கதை: பிரசன்ன விதானகே மற்றும் அனுஷ்கா சேனாநாயக்க ஆகியோர் சிறந்த திரைக்கதை பிரிவில் போட்டியில் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அமைத்த திரைக்கதை இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஆகும். அதேபோல் பொன்னியின் செல்வன் மற்று ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்ரீகர் பிரசாத்தும் சிறந்த எடிட்டிங் பிரிவில் போட்டியில் இருக்கிறார்.
நடிகர்கள்: பாரடைஸ் படத்தில் ரோஷன்மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷ்யாம் ஃபெர்ணாண்டோ, மகேந்திர பெரேரா நடித்திருக்கின்றனர். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, கே.இன் என்பவர் இசையமைத்திருக்கிறார். ஆசிய விருதுகளில் நாமினேட் செய்யப்பட்டது தொடர்பாக, படத்தை தாயரித்த நியூட்டன் சினிமாஸ் தரப்பில், "இந்த பரிந்துரைகள் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியின் தருணம். இது எங்கள் படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, எங்கள் குழுவின் கூட்டு மனப்பான்மை மற்றும் கடின உழைப்பின் கொண்டாட்டம்" என்று தெரிவித்திருக்கிறது. இப்படமானது இந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











