எந்த படம் எந்த தேதியில் ரிலீஸ்...அடுத்த 3 மாதத்திற்கான லிஸ்ட் ரெடி
சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் பெரிய படங்கள், சிறிய படங்கள், தள்ளிப் போன படங்கள் என அனைத்தின் ரிலீஸ் தேதிகளும் மும்முரமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் சில படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன. பல படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியில் கசிந்து விட்டாலும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பின் காரணமாக ஜனவரியில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியன அமல்படுத்தப்பட்டன. இதனால் புத்தாண்டு ரிலீஸ், பொங்கல் என பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்ட படங்கள் அனைத்தும் வரிசையாக அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. ரிலீஸ் தேதி உறுதியாக தெரியாததால் தங்களின் ஃபேரைட் ஸ்டார்களின் படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியாமல் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

100 சதவீதம் அனுமதி வருமா
தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் பிப்ரவரி மாத இறுதிக்குள் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலீசுக்கு தயாராகும் படங்கள்
இருந்தாலும் ரசிகர்களை அதிக நாட்கள் காக்க வைக்கக் கூடாது என்பதற்காக அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி இதுவரை வெளியான தகவல்களின் படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் எந்த தேதியில் எந்தெந்த படங்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளன என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது. இவற்றில் சில படங்கள் ஏற்கனவே ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்து அறிவித்து விட்டனர். படங்களின் ரிலீஸ் லிஸ்ட் இதோ...

பிப்ரவரி
பிப்ரவரி 4 - வீரமே வாகை சூடும்
பிப்ரவரி 11 - கடைசி விவசாயி
ஐஸ்வர்ய முருகன்
எஃப்ஐஆர்
பிப்ரவரி 23 - ஹே சினாமிகா
பிப்ரவரி 24 - வலிமை
மார்ச்
மார்ச் 11 - எதற்கும் துணிந்தவன்
மார்ச் 25 - டான்
மார்ச் 18/ 28 - ஆர்ஆர்ஆர்
மார்ச் 31 - காத்து வாக்குல ரெண்டு காதல்
ஏப்ரல்
ஏப்ரல் 14 - பீஸ்ட்
கேஜிஎஃப் 2

தயாராகும் ரசிகர்கள்
இந்த லிஸ்டில் மேலும் பல படங்கள் இணைய வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அதிலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











