twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் பட நடிகரின் அடுத்த பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்: மலையான்குஞ்சு படத்துக்கு கிடைத்த வரவேற்பு எப்படி?

    |

    திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசிலின் 'மலையான்குஞ்சு' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

    திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு ஏ.ஆர். இசையமைத்துள்ளார், மகேஷ் நாராயணன் கதை, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள 'மலையான்குஞ்சு' படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    தேசிய விருது பெற்ற சிறந்த மலையாள மூவி 'திங்களச்ச நிச்சயம்’ ரிவ்யூ..கலகல படத்தை ஓடிடியில் பார்க்கலாம்தேசிய விருது பெற்ற சிறந்த மலையாள மூவி 'திங்களச்ச நிச்சயம்’ ரிவ்யூ..கலகல படத்தை ஓடிடியில் பார்க்கலாம்

    நடிப்பில் அசுரன்

    நடிப்பில் அசுரன்

    இயக்குநர் ஃபாசிலின் மகனான ஃபஹத் ஃபாசில், மலையாளத் திரையுலகம் மட்டுமின்றி, இந்திய சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக வலம் வருகிறார். ஆரம்ப காலங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான ஃபஹத்தின் நடிப்பு, தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. அவரது அசுரத்தனமான நடிப்பை திரையில் பார்க்கும் ரசிகர்கள், ஃபஹத்தின் நடிப்பை கண்கொட்டாமல் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    விக்ரம் படத்தில் மிரட்டிய ஃபஹத்

    விக்ரம் படத்தில் மிரட்டிய ஃபஹத்

    கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான 'விக்ரம்' படத்தில், அமர் என்ற பாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டியிருந்தார் ஃபஹத் ஃபாசில். 'விக்ரம்' படத்தின் பெரும் வெற்றிக்கு ஃபஹத் ஃபாசிலின் நடிப்பும் மிக முக்கிய காரணமாக இருந்ததாக, சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஒருபக்கம் மாஸ் படங்களில் ஹீரோ, வில்லன் பாத்திரங்களில் நடித்து வந்தாலும், இன்னொரு பக்கம், யதார்த்தமான புதுமையான கதைகளையும் தேடி நடித்து வருகிறார்.

    மலையான்குஞ்சு

    மலையான்குஞ்சு

    தமிழில் 'மாமன்னன்', தெலுங்கில் 'புஷ்பா 2' மலையாளத்தில் சில படங்கள் என பிஸியாக இருக்கும் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பில் கடந்த வாரம் 'மலையான்குஞ்சு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. மகேஷ் நாராயணன் கதை, திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவும் செய்துள்ள இப்படத்தை, சாஜிமோன் பிரபாகர் இயக்கியுள்ளார். 'மலையான்குஞ்சு' இவர் இயக்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    குழந்தையின் அழுகை

    குழந்தையின் அழுகை

    மலையான்குஞ்சு படத்தில் ஃபஹத் ஃபாசில் அனிகுட்டன் என்ற எலக்ட்ரீஷியன் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பக்கத்து வீட்டில் புதிதாக பிறந்த பொன்னி என்ற குழந்தை, அடிக்கடி அழுதுகொண்டே இருக்கிறது. இதனால் வேலை பார்க்க முடியாமல் அந்த குழந்தையின் மீது ரொம்பவே எரிச்சல் படுகிறார் ஃபஹத் ஃபாசில். ரொம்பவே குரூரமான இந்தப் பாத்திரத்தில் நடிக்க ஃபஹத்துக்கு நிச்சயமாக பெரிய துணிச்சல் வேண்டும் என, விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    நிலச்சரிவில் சிக்கும் ஃபஹத் ஃபாசில்

    நிலச்சரிவில் சிக்கும் ஃபஹத் ஃபாசில்

    இந்த நிலையில், திடீரென ஏற்படும் நிலச்சரிவால் ஃபாஹத் ஃபாசில், 40 அடி பள்ளத்தில் சிக்கிவிடுகிறார். அங்கு எந்த உதவியும் கிடைக்காத ஃபஹத்துக்கு, தூரமாக கேட்கும் குழந்தை பொன்னியின் அழுகை மட்டுமே, எப்படியும் மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது. இறுதியாக ஃபஹத் ஃபாசில் பள்ளத்தில் இருந்து வெளியே வந்தாரா இல்லையா என்பது தான் மொத்த படமும்.

    அபாரமான மேக்கிங்

    அபாரமான மேக்கிங்

    நிலச்சரிவு, பள்ளத்தாக்கு என இந்த இரண்டையும் தரமாக திரையில் காட்டியுள்ள படக்குழு, அதற்காக பிரம்மாண்டமான செட்டிங் போட்டு அபாரமாக உழைத்துள்ளனர். படத்தின் மொத்த பாரத்தையும் தன் தோள்களில் சுமந்துள்ளார் ஃபஹத் ஃபாசில். பேரிடரில் சிக்கியிருப்பவர்கள் மனநிலையை ரொம்பவே நுட்பமான திரைமொழியில் காட்டியுள்ளனர். இதனால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இசைப்புயலின் மேஜிக்

    இசைப்புயலின் மேஜிக்

    மலையான்குஞ்சு படத்தை முழுவதுமாக எடுத்துவிட்டு ஏ.ஆர். ரஹ்மானிடம் போட்டுக் காட்டியுள்ளார் ஃபஹத் ஃபாசில். மொத்தப் படத்தையும் பார்த்த இசைப்புயல், 6 மாதங்கள் டைம் கேட்டு படத்திற்கு செம்மையான பின்னணி இசையும், சூப்பரான பாடல்களையும் கம்போஸ் செய்து கொடுத்துள்ளார். இதனால் உற்சாகமடைந்த ஃபஹத், 'மலையான்குஞ்சு' படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. இதனிடையே படத்தைப் பார்த்த ரசிகர்கள், ஏ.ஆர். ரஹ்மானின் இசையை ரொம்பவே பாராட்டியுள்ளனர்.

    பாக்ஸ் ஆஃபிஸ்

    பாக்ஸ் ஆஃபிஸ்

    'மலையான்குஞ்சு' படத்தின் பட்ஜெட் ரொம்பவே குறைவு எனத் தெரிகிறது. ஃபஹத்தின் தந்தை டைரக்டர் ஃபாசில் தான் இந்தப் படத்தை ப்ரொடியூஸ் செய்துள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஃபஹத் நடிக்கும் படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'மலையான்குஞ்சு' திரைப்படம் வெளியாகி 5 நாட்களில், இதுவரை 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தெரிகிறது. மலையாள சினிமாவைப் பொறுத்தவரையில் இது பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்றே கூறப்படுகிறது.

    English summary
    Next box office hit from Vikram film hero: What's the audience response for Malayankunju film?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X