அடுத்த எம்ஜிஆர் சூர்யா தான்... புகழ்ந்த சத்யராஜ்!
சென்னை : இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்
Recommended Video
கிராமத்து கதை களத்தில் கூட்டுக் குடும்பத்தை பற்றியும் , பெண் பாலியல் வன்கொடுமைகளை பற்றி ஆணித்தனமாக பேச உள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்
எதற்கும் துணிந்தவன் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சத்யராஜ் அடுத்த எம்ஜிஆர் சூர்யாதான் என புகழ்ந்து பேசியுள்ளார்.

சமூக கருத்துக்களை
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளது. அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் பழங்குடியினருக்கு ஆதரவாகவும் அதிகாரத் திமிரில் இருக்கும் ஒரு சில போலீஸ் அதிகாரிகளுக்கு சவுக்கு அடியாகவும் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் ஆஸ்கர் யூடியூப் தளத்திலும் இந்த படத்தின் வீடியோ பதிவேற்றப்பட்டது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பெருமையை ஏற்படுத்தியுள்ளது

எதற்கும் துணிந்தவன்
இந்த நிலையில் அடுத்ததாக சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து கூட்டுக்குடும்ப படங்களை எடுத்து வரும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் இந்த படமும் கூட்டுக் குடும்பத்தின் பின்னணியில் உருவாகி வருகிறது. சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய்,ராஜ் கிரண்,புகழ், சூரி, ரெடின் கிங்ஸ்லி, எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி என பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நிஜத்திலும் துணிச்சலாக
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பியது. அதில் சூர்யா முரட்டுத்தனமான கிராமத்து ஆளாக பட்டையை கிளப்பியிருப்பார். இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் விழாவில் அடுத்த எம்ஜிஆர் சூர்யா தான் என சத்யராஜ் புகழ்ந்து பேசியுள்ளார்.

அடுத்த எம்ஜிஆர் சூர்யாதான்
மக்கள் திலகம் எம்ஜிஆர் எப்படி திரைப்படங்களில் ஏழைகளுக்கு உதவுவாரோ அதேபோலதான் நிஜத்திலும் இருப்பார். அதே போலத்தான் நடிகர் சூர்யாவும் எப்படி திரைப்படங்களில் அநியாயத்திற்கு எதிராகவும் சமூக அவலங்கங்களை பற்றியும் ஒவ்வொரு படங்களிலும் துணிச்சலாக பேசுகிறாரோ அதேபோலதான் நிஜத்திலும் துணிச்சலாக இருக்கிறார். தமிழ் சினிமாவிலேயே எம்ஜிஆருக்கு அடுத்து சூர்யாதான் திரைப்படங்களில் என்ன சொல்கிறாரோ அதை நிஜத்திலும் செய்து காட்டி வருகிறார். சூர்யா தான் அடுத்த எம்ஜிஆர் என சத்யராஜ் மேடையில் புகழாரம் சூட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











