நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்!

சென்னை : ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்களை முடித்த கையோடு இப்பொழுது கார்த்திக் நரேன் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் தனுஷ்.

அசுரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஹாலிவுட்டில் மீண்டும் பிரம்மாண்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்பு தனுஷை தாக்கி பேசுவதாக சில வசனங்கள் இடம்பெற்ற நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக தனுஷ் ட்விட்டர் அக்கவுண்டில் பெயரை மாற்றி உள்ளது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

தனி பாதையை

தனி பாதையை

தமிழ் சினிமாவில் தொழில்ரீதியாக போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வரும் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் வெற்றி மற்றும் தோல்வி என இரண்டையும் கண்டு ஈடு இணையற்ற நடிகர்களாக தனித்துவமாக தங்களுக்கான தனி பாதையை அமைத்துக்கொண்டு அதில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

 தி கிரே மேன்

தி கிரே மேன்

இதில் தனுஷ் தமிழ் சினிமாவில் கலக்கியது போக ஹிந்தி மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் இப்பொழுது கலக்கி வர அவெஞ்சர்ஸ் தி என்டு கேம் படக்குழுவின் அடுத்த திரைப்படமான தி கிரேமேன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வெங்கடேஷ் நடிப்பில்

வெங்கடேஷ் நடிப்பில்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே தனிச் சிறப்பு பெற்றிருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல திரையரங்களில் 100 நாட்கள் ஓடி சாதனையும் செய்துள்ளது. இந்த திரைப்படம் இப்பொழுது தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் நாரப்பா என்ற பெயரில் உருவாகி வருகிறது அதில் பிரியாமணி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தனுஷை மறைமுகமாக

தனுஷை மறைமுகமாக

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்க ஆரம்பமே அதிரடியாக சுசீந்திரன் இயக்கி நடித்த ஈஸ்வரன் திரைப்படம் கடந்த பொங்கலன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்களுடன் வெளியாகியிருந்த ஈஸ்வரன் திரைப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நீ அழிக்க வந்த அசுரன்னா நான் காக்க வந்த ஈஸ்வரன் டா என பன்ச் வசனம் நடிகர் தனுஷை மறைமுகமாக தாக்கி பேசுவதாக வலைதளங்களில் இரு ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய வாக்குவாதம் நடைபெற்றது.

பயோ விவரத்தில்

பயோ விவரத்தில்

எனினும் இதைப் பற்றி தனுஷ் தரப்பில் இருந்தோ சிம்பு தரப்பில் இருந்தோ எந்த ஒரு விளக்கமும் அளிக்காத நிலையில், தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அசுரன்.. தனுஷ் என்று தனது பயோ விவரத்தில் குறிப்பிட்டுள்ளது இப்பொழுது மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகியுள்ளது. தனுஷின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருக்கும் அசுரன் பெயரை பார்த்துவிட்டு சிம்புவுக்கு தான் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X