அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொன்னேனா?: கே. எஸ். ரவிக்குமார் விளக்கம்
சென்னை: அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் ட்விட்டரில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் ட்விட்டரிலேயே இல்லாதது தெரிய வந்துள்ளது.
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று பிரபல வார பத்திரிக்கை கருத்துக்கணிப்பை நடத்தியதும் நடத்தியது சமூக வலைதளங்களில் விஜய், அஜீத் ரசிகர்கள் போடும் சண்டைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் இயக்குனர் கே. எஸ்.ரவிக்குமாரின் தலையும் உருட்டப்பட்டது.

அஜீத்
அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் தான் என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ட்விட்டரில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ட்விட்டர்
தனக்கு ட்விட்டரில் கணக்கே இல்லை என்றும், தனது பெயரில் உள்ள கணக்கு போலியானது என்றும் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

போலி கணக்குகள்
சமூக வலைதளங்களில் பல போலி கணக்குகள். அதிலும் ஒரு கணக்கில் நான் தான் என்று கூறி தெரிவிக்கப்பட்ட கருத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இவ்வாறு செய்தார்கள் என்று தெரியவில்லை. எனக்கு ஃபேஸ்புக்கில் தான் கணக்கு உள்ளது என்று ரவிக்குமார் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

அடுத்த சூப்பர் ஸ்டார்
எனக்கு திரை உலகில் மதிப்பு உள்ளது. பல்வேறு விஷயங்கள் குறித்து என்னிடம் கருத்து கேட்டுள்ளனர். ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டாரை முடிவு செய்ய நான் ஆள் இல்லை என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.

ரசிகர்கள்
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை தீர்மானிக்க நான் யார். அதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார் ரவிக்குமார்.

விஜய், அஜீத்
விஜய் அல்லது அஜீத்தை பற்றி ஒரு முடிவுக்கு வர நான் யார். அவர்களுடன் பணியாற்றியது மிகவும் நல்ல அனுபவம். அவர்களின் பணியை பாராட்டியுள்ளேன். ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்று ரவிக்குமார் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











