தலைவரான ஆரி.. சோமசேகர் வெளியே போவது உறுதி.. பாலாவுக்கு ரெட் கார்ட்? பரபரக்கும் பிக் பாஸ் வீடு!

சென்னை: எதிர்பார்த்தபடியே சோமசேகர் இந்த வாரமும் தலைவராகவில்லை. நிச்சயம் அவர் தான் வெளியே போகப் போகிறார் என்பது உறுதி ஆகி விட்டது.

சம்யுக்தாவையும், பாலாவையும் எதிர்த்து சண்டை போட்டே தலைவராகி விட்டார் ஆரி.

சோமசேகர் கூடவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார் பாலாஜி என்கிற தகவல்களும் வெளியாகி வருகின்றன.

சிறப்பா விளையாடியவர்கள்

சிறப்பா விளையாடியவர்கள்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போரிங் போட்டியாளர்களை தேர்வு செய்யவில்லை. சிறப்பாக விளையாடிய மூன்று பேரை தேர்வு செய்ய பிக் பாஸ் கோரினார். ஹவுஸ்மேட்கள் அனைவரும் அதிகளவில் சோமசேகர், ஆரி மற்றும் நிஷாவுக்கு ஆதரவு அளித்தனர். அந்த மூன்று பேரும் தலைவர் போட்டிக்கு தகுதியானார்கள்.

பாலாவுக்கு ஓட்டுப் போட்டது

பாலாவுக்கு ஓட்டுப் போட்டது

ஆஜீத், கேபி எல்லாம் பாலாவுடன் சுற்றி வந்தாலும், ஷிவானி, பாலா சேர்ந்து பழகுவது இருவருக்குமே பிடிக்கவில்லை. வழக்கம் போல, சம்யுக்தா மற்றும் ஷிவானி மட்டுமே பாலாவுக்கு சிறந்த போட்டியாளர் என ஓட்டுப் போட்டனர். ஷிவானி பாலா மற்றும் சோமசேகருக்கு ஓட்டுப் போட்டு இளைஞர்களின் ஃபேவரைட் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

கயிறு கட்டும் போட்டி

கயிறு கட்டும் போட்டி

பிக் பாஸ் வீட்டில் தலைவர் போட்டி இந்த முறையும் பிசிக்கல் டாஸ்க்காகவே வந்தது. வேல்முருகனை தூக்கி சுமந்து வெற்றியை கோட்டை விட்ட ஆரியும், பாலாஜியால் சீட்டிங் செய்யப்பட்டு சம்யுக்தாவிடம் தோற்ற சோமசேகரும், ரம்யாவால் மாற்றப் பட்ட நிஷாவும் இந்த முறை நல்லாவே விளையாடினார்கள்.

பாலாவை விடுறதா இல்லை

பாலாவை விடுறதா இல்லை

பிக் பாஸ் வீட்டின் கேமராவுக்கு முன்னாடி சொன்னது போலவே, பாலாஜி முருகதாஸை சரி செய்ய ஆரி, தனக்கு கயிறு கட்டி விட பாலாவையே வம்படியாக அழைத்தார். ஆனால், முதலில் தனக்கு கயிறு கட்டத் தெரியாது என கோபத்தில் வடை சுட்ட பாலா, அதன் பின்னர் ஆரிக்கு கயிறு கட்டி விட்டு, வெற்றிக்கு வித்திட்டார்.

வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

எதிர்பார்த்தது போலவே சோமசேகர் கடைசி நொடியில் அவுட்டாகி, ஆரி அடுத்த வார கேப்டனாக தேர்வானார். ஆரியையும் தான் தான் கேப்டன் ஆக்கினேன் என அடுத்த வாரம் பாலா, ஆரிக்கு ஜால்ரா தட்டாமல் இருந்தால் சரி என்று பிக் பாஸ் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆடிப் போன சம்யுக்தா

ஆடிப் போன சம்யுக்தா

நடிகர் ஆரியை அனைவரும் சிறந்த போட்டியாளர்கள் என்று தேர்வு செய்ததையே தாங்கிக் கொள்ள முடியாத சம்யுக்தாவுக்கு ஆரி கேப்டனாக மாறியது பேரிடியாக விழுந்தது. சம்யுக்தாவிடம் சுட்டிக் காட்டிய குறைகளை எல்லாம் இல்லாமல், ஆரி எப்படி அடுத்த வாரம் இந்த பிக் பாஸ் வீட்டை நடத்துகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நல்ல கேப்டன்சி

நல்ல கேப்டன்சி

கேப்டனாக ஆரி தேர்வானதும், இளைஞர்களான கேபி, ஆஜீத்தை எல்லாம் கேப்டனாக்கினார். ஆஜீத் அந்த பொறுப்பில் இருந்து நைஸா நழுவி ஷிவானியை கோர்த்து விட்டார். ஏகப்பட்ட சிறப்பு திட்டங்களுடன் நடிகர் ஆரி ஒவ்வொரு டீமையும் பிரித்ததை பார்த்த ரசிகர்கள் கேப்டன்னா இப்படித்தான் இருக்கணும் என பாராட்டி வருகின்றனர். அடுத்த வாரம் இறுதி வரை இது நீடிக்கிறதா? இல்லை ஆரிக்கு வேட்டுவைக்க பிக் பாஸ் என்ன பிளான் போட்டு இருக்கிறார் என்பதை வேற வழியின்றி பார்ப்போம்.

நோ எவிக்‌ஷன்

நோ எவிக்‌ஷன்

சோமசேகர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே போவார் என்றும், பாலாஜி முருகதாஸுக்கு அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்படுவார் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், கமல்ஹாசனின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வாரம் எந்தவொரு எவிக்‌ஷனும் இருக்காது என்றும் சில வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. சனம் ஷெட்டியே அந்த பிரச்சனையை பிக் பாஸ் வீட்டில் பெரிது படுத்தாததால் நிச்சயம் ஒரு சமரசம் ஆகி இருக்கும் என்றும் தெரிகிறது பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X