NFDC இந்த ஒடிடி பற்றி தெரியுமா? இந்திய அரசின் பிரத்யேக தயாரிப்பு படங்களை இங்கே காணலாம்!

சென்னை: எல்லோருக்கும் OTTஎன்றால் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற தளங்கள் தான் தெரியும் எத்தனை பேருக்கு NFDC (National Film Development Corporation of India) தளம் குறித்து தெரியும்.

மேற்சொன்ன OTT தளங்களில் நீங்கள் வழக்கம் போல கமர்ஷியல் படங்களை பார்த்து ரசிக்கலாம். ஆனால் இந்திய அரசு நிறுவனமான National Film Development Corporation of India தளத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான சினிமாக்களை எல்லாம் பார்க்க முடியும்.

NFDC OTT has a rare collection of government produced movies!

சத்யஜித்ரே, ஸியாம் பெனகல், அடூர் கோபால கிருஷ்ணன், மீரா நாயர் போன்றோரின் படங்கள் காணக் கிடைக்கும். காந்தி திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. அம்பேத்கர் படங்கள் கிடைக்கிறது.

சலாம் பாம்பே, ட்ரைன் டூ பாகிஸ்தான், ஜிவி ஐயர் இயக்கிய ஆதி சங்கராச்சார்யா போன்ற திரைப்படங்கள் இந்த National Film Development Corporation of India தளத்தில் கிடைக்கிறது.

NFDC OTT has a rare collection of government produced movies!

தூர்தர்ஷனின் நாம் சின்னவயதில் பார்த்து ரசித்த மாநில மொழித் திரைப்படங்கள், தேசிய விருது பெற்ற படங்கள். திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படைப்புகள் என மொத்த இந்தியாவின் நல்ல கலைப்படைப்புகள் பலவும் இதில் உள்ளன.

சந்தாவும் மிகவும் குறைவு தான். ஓராண்டுக்கு அனைத்து படங்களையும் பார்க்க வெறும் 599 ரூபாய் கட்டினால் போதும். ஒரு மாதத்திற்கு 149 ரூபாய் சந்தாவாக வசூலிக்கப்படுகிறது. ஒரே ஒரு படத்தை 72 மணி நேரம் வாங்கி பார்க்க 60 ரூபாய் கட்டணம் இதில் வசூலிக்கப்படுகிறது.

மேலும், அரசு சார்பாக நடத்தப்படும் குறும்பட போட்டிகள் குறித்த தகவல்களும், விருது பெற்ற குறும்படங்களையும் கூட இந்த தளத்தில் காணலாம்.

NFDC OTT has a rare collection of government produced movies!

சினிமாவை விரும்பி படிக்கும் மாணவர்களுக்கும், சினிமா நேசர்களுக்கும் இந்த தளம் ஒரு பொக்கிஷமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X