NGK box office collection: ஒண்ணுமே இல்லாட்டியும்.. சூர்யா, செல்வாவை கடவுள் காப்பாத்திட்டாரு!
சூர்யாவின் என் ஜி கே முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது.
சென்னை: கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும், என் ஜி கே முதல் நாள் வசூல் வசூல் சாதனை படைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.
சமகால அரசியல் கதையை மையப்படுத்திய இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கலவையான விமர்சனம்:
பலத்த எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியான இப்படம் ஏமாற்றமளிப்பதாக பெரும்பாலானோர் தெரிவித்தனர். செல்வாவும், சூர்யாவும் ஏமாற்றி விட்டதாக சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இத்தகைய விமர்சனங்களால் என் ஜி கே வசூல் பாதிக்கப்படவில்லை. இந்தாண்டு வெளியான படங்களில் வசூல் ரீதியில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது என்ஜிகே.

வசூலில் சாதனை:
இப்படம் தமிழகத்தில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து நல்ல ஓப்பனிங் பெற்றுள்ளது. சென்னை நகரத்தில் மட்டும் படம் 1.03 கோடி ருபாய் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், சென்னையில் முதல் நாளில் கோடி ருபாய் வசூல் செய்த முதல் சூர்யா படம் என்ற பெருமையை என் ஜி கே பெற்றுள்ளது.

முதல் வார வசூல்:
தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், கேரளா மற்றும் ஆந்திராவில் குறைந்த வசூலையே பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ஆன்லைன் முன்பதிவு நன்றாக சென்றுகொண்டிருப்பதாக தியேட்டர் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், முதல் வார வசூல் உச்சிக்கு செல்லும் என்பது தெரிகிறது.

ரசிகர்கள் பிரார்த்தனை:
எது எப்படியோ, படத்தில் குழப்பங்கள் பல இருப்பதால் சூர்யாவையும், செல்வாவையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என நேற்று #prayforNGK என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கானது. ரசிகர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை என்பது முதல் நாள் வசூல் மூலம் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











