சென்னையில் 3 நாட்களில் ரூ. 3 கோடி வசூலித்த என்.ஜி.கே.: 2ம் பாகம் கேட்கும் ரசிகர்கள்

By Siva

Recommended Video

NGK Movie Review | NGK படம் எப்படி இருக்கு மக்கள் கருத்து- வீடியோ

சென்னை: என்.ஜி.கே. படம் ரிலீஸான மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸாகி தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிற மாநிலங்களில் என்.ஜி.கே.வுக்கு அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை.

NGK collects Rs. 3 crore in Chennai Box office

தெலுங்கானா, ஆந்திராவில் என்.ஜி.கே. படத்தை பார்த்தவர்கள் கதையே புரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். யார் என்ன சொன்னாலும் தமிழகத்தில் நந்த கோபாலன் குமரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

என்.ஜி.கே. படம் ரிலீஸான அன்று சென்னை பாக்ஸ் ஆபீஸில் ரூ. 1.03 கோடியும், மறுநாள் ரூ. 1.07 கோடியும் வசூல் செய்தது. ஞாயிற்றுக்கிழமை படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் என்.ஜி.கே. நேற்று ரூ. 97 லட்சம் தான் வசூல் செய்துள்ளது.

என்.ஜி.கே. படம் ரிலீஸான மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது சூர்யா ரசிகர்களுக்கு நல்ல செய்தியாகும். என்.ஜி.கே. படத்தை சூர்யா தனது தோளில் தாங்கியுள்ளார். அவருக்குள் இப்படி ஒரு நடிப்புத் திறமை இருந்தது இத்தனை ஆண்டுகளாக தெரியாமல் போய்விட்டது. நல்ல வேளை அவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார் என்கிறார்கள் ரசிகர்கள்.

என்.ஜி.கே. படத்தை மற்றவர்களுக்கு அந்த அளவுக்கு பிடிக்காவிட்டாலும் சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இதையடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு செல்வராகவனிடம் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்.ஜி.கே. அப்டேட் கேட்டு ட்விட்டரில் கத்தி, கதறியதை எல்லாம் அவர்கள் மறக்கவில்லை. இருப்பினும் சூர்யாவுக்கு செல்வராகவன் ஸ்பெஷல் என்று நினைப்பதால் தான் ரசிகர்கள் என்.ஜி.கே. 2 படம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

வழக்கமாக தனுஷ் படங்களில் தான் ஹீரோயின்களின் நடிப்பை பற்றி யாரும் பேச மாட்டார்கள். காரணம் தனுஷ் தனது நடிப்பால் மிரட்டி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துவிடுவார். இந்நிலையில் என்.ஜி.கே. படத்தை பார்த்தவர்கள் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பை கண்டுகொள்ளவில்லை. காரணம் சூர்யாவின் ராட்சச நடிப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X