தமிழகத்தில் மட்டும் 5 நாளில் ரூ. 52 கோடி வசூலித்த என்.ஜி.கே.

By Siva

Recommended Video

NGK Movie Review | NGK படம் எப்படி இருக்கு மக்கள் கருத்து- வீடியோ

சென்னை: என்.ஜி.கே. படத்திற்கு எதிர்மறை விமர்சனம் எழுந்தும் அது வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் வாவ், வவ்வாவ், சான்சே இல்லை என்றார்கள்.

மற்றவர்களோ மொக்கை, கொடூர மொக்கை என்று விளாசினார்கள். ஆனால் அவர்களின் விளாசல் படத்தின் வசூலை தமிழகத்தில் பாதிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

என்.ஜி.கே.

என்.ஜி.கே.

என்.ஜி.கே. படம் சென்னை பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. படம் ரிலீஸான முதல் மூன்று நாட்கள் தினமும் ரூ. 1 கோடி வசூலித்தது. 4வது நாள் ரூ. 36 லட்சமும், 5வது நாள் ரூ. 34 லட்சமும் வசூலித்துள்ளது. ஆக படம் ரிலீஸான 5 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 3. 92 கோடி வசூலித்துள்ளது.

தமிழகம்

தமிழகம்

என்.ஜி.கே. படத்திற்கு தமிழகத்தில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. படம் ரிலீஸான முதல் நாள் ரூ. 14.28 கோடியும், 2வது நாள் ரூ. 14.75 கோடியும், 3வது நாள் ரூ. 15.12 கோடியும், 4வது நாள் ரூ. 4.03 கோடியும், 5வது நாள் ரூ. 3.86 கோடியும் வசூல் செய்துள்ளது. 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் என்.ஜி.கே. ரூ. 52.04 கோடி வசூலித்துள்ளது.

சூர்யா

சூர்யா

சூர்யா கெரியரிலேயே என்.ஜி.கே. தான் மோசமான படம். இதற்கு தானா சேர்ந்த கூட்டம் படமே பரவாயில்லை என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் சூர்யா கெரியரில் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலில் என்.ஜி.கே. சேர்வதை யாராலும் தடுக்க முடியாது. நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தபோதிலும் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

என்.ஜி.கே. படத்தில் நடித்தபோது சூர்யாவுக்கும், செல்வராகவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் சூர்யா செல்வராகவனை பற்றி பேசியதை பார்த்தபோது அப்படி எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இடையே ஈகோ பிரச்சனை என்று பேச்சு கிளம்பியது. ஒரு ஈகோ, போகோவும் இல்லை என்று ரகுல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X