2 நாளில் இத்தனை கோடி வசூலா?: கடவுள் இருக்கான் நந்த கோபாலன் குமாரு #NGK

By Siva

சென்னை: என்.ஜி.கே. பட வசூல் விவகாரத்தில் ஷாருக்கானின் ராசி சூர்யாவுக்கு ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் நேற்று முன்தினம் வெளியானது. படத்தை பார்த்தவர்கள் சூர்யா-செல்வா கெரியரில் இது தான் மோசமான படம் என்று விமர்சித்தார்கள்.

இது போதாது என்று தமிழ் ராக்கர்ஸ் வேறு படம் ரிலீஸான கையோடு அதை ஆன்லைனில் கசியவிட்டு படக்குழுவை அதிர வைத்தது.

செல்வராகவன்

செல்வராகவன்

என்.ஜி.கே. படம் அனைவருக்கும் பிடிக்கவில்லை என்று கூற முடியாது. படத்தை பார்த்துவிட்டு இதை 10 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடுவார்கள் என்று கூறியவர்கள் பலர். திரையுலக பிரபலங்கள் எல்லாம் என்.ஜி.கே. வேற லெவல் என்றார்கள். தன் படத்திற்கு அமோக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் செல்ராகவன்.

வசூல்

வசூல்

என்.ஜி.கே. படத்தை பார்த்தவர்கள் அதை கழுவிக் கழுவி ஊத்தியபோதிலும் அதன் வசூல் பாதிக்கப்படவில்லை. சென்னை பாக்ஸ் ஆபீஸில் தரமான சம்பவம் செய்து கொண்டிருக்கிறது என்.ஜி.கே. அந்த படம் ரிலீஸான அன்று ரூ. 1.03 கோடியும், நேற்று ரூ. 1.07 கோடியும் வசூலித்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபீஸில் மட்டும் தினமும் ரூ. 1 கோடி வசூலிப்பது சாதாரண விஷயம் இல்லை.

அமெரிக்கா

அமெரிக்கா

என்.ஜி.கே. படம் தமிழகத்தில் மட்டும் அல்ல அமெரிக்காவிலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸான இரண்டே நாட்களில் அமெரிக்காவில் மட்டும் ரூ. 81 லட்சத்து 37 ஆயிரத்து 371 வசூல் செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் என்.ஜி.கே. படம் பார்க்க தியேட்டருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஷாருக்கான் ராசி

ஷாருக்கான் ராசி

அது என்ன சூர்யாவுக்கு ஷாருக்கான் ராசி என்று நினைக்கலாம். பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் படங்கள் வெளியாகும் போது அதை விமர்சகர்கள் கழுவிக் கழுவி ஊத்துவார்கள். ஆனால் ரசிகர்களோ தியேட்டர்களுக்கு படையெடுத்து அதை ஹிட்டாக வைத்துவிடுவார்கள். அந்த ராசி தான் தற்போது சூர்யாவுக்கு ஒர்க்அவுட் ஆகிக் கொண்டிருக்கிறது. சும்மாவா, இது தானா சேர்ந்த கூட்டமாச்சே. கடவுள் இருக்கான் நந்த கோபாலன் குமாரு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X