மே 31ல் வெளியாகும் என்.ஜி.கே.: சூர்யா ரசிகர்களை இனி கையில் பிடிக்க முடியாது
சென்னை: என்.ஜி.கே. படம் வரும் மே மாதம் 31ம் தேதி ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அறிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் என்.ஜி.கே. பட ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனதால் ரசிகர்கள் கடுப்பானார்கள்.

மேலும் படம் குறித்து அப்டேட் எதுவும் கிடைக்காமல் இருந்ததால் சூர்யா ரசிகர்கள் கோபம் அடைந்தனர். இந்நிலையில் என்.ஜி.கே. படம் வரும் மே மாதம் 31ம் தேதி ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒரு அப்டேட் கிடைக்காதா என்று ஏங்கியவர்களுக்கு ரிலீஸ் தேதி தெரிந்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
முன்னதாக கடந்த 22ம் தேதி சூர்யா என்.ஜி.கே. பட டப்பிங் பணியை துவங்கினார். அது குறித்த புகைப்படத்தை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு ரிலீஸ் விபரம் ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என்றார். நல்ல வேளையாக இழுத்தடிக்காமல் சீக்கிரமே அறிவித்துவிட்டார்.
எஸ்.ஆர். பிரபு ட்வீட் செய்த வேகத்தில் #NGKfromMay31 என்ற ஹேஷ்டேகுடன் சூர்யா ரசிகர்கள் ட்வீட் செய்யத் துவங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











