என்.ஜி.கே. வசூல் 7 நாளில் ரூ. 100 கோடியாம்ப்பு: கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

By Siva

சென்னை: என்.ஜி.கே. படம் ரிலீஸான ஏழே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டது என்று கூறி சூர்யா ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் 31ம் தேதி வெளியான படம் என்.ஜி.கே. படத்தை பார்த்த சூர்யா ரசிகர்களுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது.

NGK joins Rs. 100 crore club: Suriya fans celebrate

மற்ற ரசிகர்களோ படம் அவ்வளவாக பிடிக்கவில்லை என்றார்கள். படம் ரிலீஸான அன்று அதை சமூக வலைதளங்களில் பலரும் கழுவிக் கழுவி ஊத்தினார்கள். ஆனால் அந்த நெகட்டிவ் விமர்சனம் பட வசூலை பாதிக்கவில்லை. என்.ஜி.கே. படம் ரிலீஸான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 52 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் என்.ஜி.கே. வெளியான 7 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டது என்று கூறி சூர்யா ரசிகர்கள் #CultNGKJoined100CrClub என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தபோதிலும் என்.ஜி.கே. படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததற்கு சூர்யா தான் காரணம் என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் என்.ஜி.கே. படம் ரூ. 200 கோடி வசூலிக்கப் போவதை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் வெளியாகி ரூ. 750 கோடி வசூலிக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

சூர்யா நடித்த 7ம் அறிவு, சிங்கம் 2, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை அடுத்து என்.ஜி.கே ரூ. 100 கோடி கிளப்பில் சேர்ந்துள்ளது என்று ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள். செல்வராகவன் கண்டிப்பாக சூர்யாவை வைத்து என்.ஜி.கே. 2 படத்தை எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யா தனது என்.ஜி.கே. படத்திற்கு அமோக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது, #NGK திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி #NGKinTheatres #கத்துக்கறேன்தலைவரே என்று தெரிவித்துள்ளார்.

அவர் ட்வீட் போட்ட விதம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. சூர்யா ரசிகர்களின் ட்வீட்டுகளை பார்த்த சில நெட்டிசன்களோ ரூ. 100 கோடிப்பு நீங்க பார்த்தீங்க, நம்பிட்டோம் என்று கலாய்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X