'NGK' சூர்யா பட டைட்டிலுக்கு இதுதான் அர்த்தமா?
சென்னை : செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யாவின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
எஸ்.ஆர்.பிரபுவின், ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல்பரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நேற்று மாலை வெளியானது. 'NGK' எனும் டைட்டிலுக்கு என்ன விளக்கம் எனத் தெரியாமல் குழம்பி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

சூர்யா பட டைட்டில்
இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாளான இன்று ஏற்கெனவே அறிவித்திருந்தபடி 'சூர்யா 36' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இந்தப் படத்திற்கு வித்தியாசமாக NGK என்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

NGK
NGK என்பதன் பொருள் என்ன என்பது குறித்த எந்த அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம் பெறவில்லை. சூர்யா, பார்ப்பதற்கு போராளியான சேகுவேரா போன்று உள்ளார். கையை உயர்த்தியிருக்கும் குறியீடும் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

வித்தியாசமான டைட்டில்
இதற்கு முன் சூர்யா நடித்த படங்களுக்கு அயன், ஆறு, 24 என்றெல்லாம் வித்தியாசமான டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்போது அதேபாணியில் NGK என்று வித்தியாசமான டைட்டிலை சூட்டியிருக்கிறார்கள்.
நந்தகோபாலன் குமரன்
'NGK' என்பது இந்தப் படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயர் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவின் பெயர் நந்தகோபாலன் குமரன் எனவும் அதைத்தான் சுருக்கி 'NGK' என வைத்திருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. படக்குழுவே இந்த குழப்பத்தைத் தீர்க்குமா என பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











