சூர்யா தாடியுடன் தயாராகிவிட்டார்.. இந்த மாதம் என்.ஜி.கே ஷூட் கன்ஃபார்ம்
சென்னை: சூர்யாவின் என்.ஜி.கே படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பமாக உள்ளது.
செல்வராகவன், சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, பாலா சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இத்திரைப்பட வேலைகள் நீண்ட நாட்களுக்கு முன்பே ஆரம்பமாகியிருந்தாலும், சில காரணங்களால் பட வேலைகள் நிறைவடையாமல் தள்ளிப் போனது.
தற்போது இம்மாதத்தில் பட வேலைகள் மீண்டும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேவி ஆனந்த் இயக்கும் படத்திற்காக ஷார்ட் ஹேர் லுக்கில் சூர்யா இருந்தார். தற்போது கேவி ஆனந்த் படத்தின் கெட்டப்பிலிருந்து சூர்யா வெளியே வந்து என்.ஜி.கே படத்திற்கு ஏற்ப தாடி மற்றும் முடியுடன் தயாராகி வருகிறார். அதனால் படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











